Browsing category

Tamil News

விடாமுயற்சி படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி […]

சூர்யா 46 : இயக்குனர் மற்றும் கதாநாயகி யார் தெரியுமா? தரமான தகவல் இதோ..!

சூர்யா 46 படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகி யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் கங்குவா. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். தற்போது இவர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற […]

தெறிக்க விடும் SK 23 படத்தின் டைட்டில்.. அறிவிப்பு இதோ..!

எஸ்கே 23 படத்தின் டைட்டில் இன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ருக்மிணி வசந்த் ,பிஜு மேனன், வித்யூத் ஜாம்வல் விக்ராந்த் போன்ற பல பிராபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

உயிர் பிழைத்த சூர்யா, கண்ணீர் விட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் டாக்டர் வந்து சூர்யா கிரகடிகல் கண்டிஷன தாண்டிட்டாரு, இனி பயப்பட எதுவும் இல்லை என்று சொல்ல குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர். சூர்யாவிற்காக கோவிலில் […]

கண்ணீருடன் கிளம்பிய ராதிகா, கோபி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கண்ணீருடன் ராதிகா கிளம்ப கோபி ஈஸ்வரியிடம் வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கேப்காரரிடம் பேசிக்கொண்டிருக்க பத்து நிமிஷத்துல வந்துருவேன் என்று சொல்லுகிறார் பிறகு கோபி ஏர்போர்ட் தானே நா விடமாட்டேன் ஆனா ப்ரீயா தான் இருக்கேன் ராதிகா என்று சொல்ல இருக்கட்டும் கோபி பரவால்ல என்று ராதிகா சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி கையில் பேக் உடன் […]

விஜயாவை உசுப்பேத்தியே சிந்தாமணி,முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவை உசுப்பேத்தி சிந்தாமணி பேச முத்து வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மனோஜின் பெயரை பச்சை குத்திக் கொண்டு வர மனோஜ் அனைவரையும் கூப்பிட்டு காட்டுகிறார். விஜயா பார்த்து பெருமை பட முத்து கிண்டல் அடிக்கிறார். ஆனால் மீனா இது எவ்வளவு பெரிய விஷயம் இதை பார்க்கும் போது எனக்கு உங்க பேர டாட்டூ போடணும்னு ஆசையா […]

‘விகடன்’ இணையதளம் முடக்கப்பட்ட விவகாரம்: தவெக தலைவர் விஜய் கண்டனம்

‘விகடன்’ பத்திரிகையின் செய்தித்தளம் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அப்போது அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து சில முக்கிய விவகாரங்கள் பற்றிப் பேசினார். ஆனால், அப்போது அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், கைவிலங்கோடு அழைத்து வரப்பட்ட விவகாரம் தொடர்பாக டிரம்பிடம் மோடி பேசாமல் இருந்ததை கண்டிக்கும் விதமாக, விகடன் ப்ளஸ் என்கிற இணைய இதழில் பிரதமர் மோடி […]

நடிகர் யோகிபாபு, கார் விபத்தில் சிக்கினாரா?: நடந்தது என்ன?

யோகிபாபு விபத்துக்கு உள்ளானாரா? என்பது குறித்து உதயா தெளிவுபடுத்தி உள்ளார். இது பற்றிக் காண்போம்.. நடிகர் யோகிபாபு சென்ற கார், விபத்தில் சிக்கியதாக இன்று காலை செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த விபத்தில் யோகிபாபுவுக்கு எந்தவித காயமுமின்றி அவர் தப்பியதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், யோகிபாபு சென்ற கார் விபத்தில் சிக்கவில்லை எனக்கூறி அவருடன் ‘அக்யூஸ்ட்’ படத்தில் நடித்து வரும் நடிகர் உதயா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், யோகிபாபுவும், தானும் […]

சினிமா துறையில் சம்பளத்தை பறிப்பதற்கு 2, 3 குரூப் இருக்கிறது: சிவகார்த்திகேயன் குற்றச்சாட்டு

‘சினிமாவில் சம்பளம் கிடைப்பது அரிதான விஷயம்’ என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். இது பற்றிய அவரது ஆதங்கம் பார்ப்போம்.. ‘அமரன்’ திரைப்பட ரிலீஸுக்கு 6 மாதங்களுக்கு முன்பே தனக்கு சம்பளம் கிடைத்துவிட்டது என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் அவர் தெரிவிக்கையில், ‘சம்பளத்தை சரியாக கொடுத்த கமல் ஹாசனுக்கு நன்றி. சரியாக சம்பளம் கிடைப்பது தமிழ் சினிமாவில் அரிதான விஷயம். தன் படங்களின் ரிலீஸுக்கு முந்தைய நாள், அன்பு அண்ணன் அலுவலகத்தில் இருப்பது வழக்கம். சம்பளத்தை சரியாக கொடுக்காமல் இருப்பதோடு […]

வெற்றி கிடைத்தால் பிறந்த ஊரையே மறந்து விடுவாயா?: ராஷ்மிகாவை டிரோல் செய்யும் நெட்டிசன்கள்

ராஷ்மிகா மந்தனா பேசிய கருத்துகளுக்காக, அதாவது எதிர்மறையான விஷயங்களுக்காக தற்போது டிரோல் செய்யப்படுகிறார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ‘சாவா’ பட விளம்பர நிகழ்ச்சியில் ராஷ்மிகா, ‘ தான் ஹைதராபாத்வாசி’ என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், நான் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவள். இங்கு தனியாக வந்தேன், இப்போது நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று நினைக்கிறேன். நன்றி’ என்று கூறிய வீடியோ கிளிப் தற்போது வைரலாகி வருகிறது. இதில், தான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்று […]