சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியீடு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ டிரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாக இணைந்துள்ளார். மேலும், ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ‘ரெட்ரோ’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2.48 […]