Browsing category

Tamil News

விஜய் சேதுபதி நடித்த ‘ட்ரெய்ன்’ படம் வெளியீடு எப்போது?

பிசாசு 2, ட்ரெய்ன் ஆகிய இரண்டு படங்களை மிஷ்கின் இயக்கியுள்ளார். ஆனால், இப்படங்கள் இன்னமும் ரிலீசாகாத நிலையில் உள்ளன. இந்நிலையில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெய்ன்’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இப்படத்தின் டிஜிட்டல் விற்கப்படாத காரணத்தால் வெளியீடு தள்ளிப்போன நிலையில், ஓடிடி சேல்ஸ் ஆவதற்கு முன்னதாகவே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தற்போது ‘ட்ரெய்ன்’ படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அவ்வகையில் இப்படத்தின் ‘கன்னக்குழிக்காரா’ […]

பிரபல நடிகரின் பேச்சுக்கு, பாடகி சின்மயி கடும் கண்டனம்..

தெலுங்கு நடிகர் சிவாஜி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘தண்டோரா’ படம் வருகிற 25-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்களின் ஆடை பற்றி சிவாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.அவர் பேசுகையில், ‘பெண்கள் கண்டபடி உடைகள் அணிந்தால், நீங்கள்தான் பிரச்சினையை சந்திக்க வேண்டி இருக்கும்.என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. எப்படி சமாளிப்பது என எனக்குத் தெரியும். உங்கள் அழகு, முழுதாக மூடும் சேலையில்தான் உள்ளதே தவிர, […]

பாலா அண்ணனின் ஆசையை சீக்கிரமே நிவர்த்தி செய்கிறேன்: சசிகுமார் பதிவு..

சமீபத்தில் நடைபெற்ற சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்காக சிறந்த நடிகர் என்ற விருதினை பெற்றார் சசிகுமார். இதற்காக இயக்குநர் பாலா சசிகுமாருக்கு கடிதமொன்றை எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், ‘சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில் ’டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்திற்கு நீ சிறந்த நடிகனாக விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் மன வெளிப்பாடுதான் இக்கடிதம். கடந்த இருபத்தைந்து வருடங்களாக உன்னைப் பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன். பேராற்றல் கொண்டவன். கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்திச் சாந்தமாக்கி […]

காதலால் ஏற்படும் வலியை சொல்லும் படம் ‘புகார்’: படக்குழு அப்டேட்ஸ்..

ஸ்ரீமதுராஜா தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம், ‘புகார்’. இதை ‘ரூட்’ படத்தை இயக்கிய ஏ.சி.மணிகண்டன் இயக்குகிறார். கதாநாயகியாக ரஷ்மிதா நடிக்கிறார். 2-வது ஹீரோவாக ராஜ்கிரண் நடிக்கிறார். மேலும் ஜனுஷ்கா, மணி செல்வம் உள்பட பலர் நடிக்கின்றனர். க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகிறது. பிச்சைக்கனி, ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் பிரபு இசையமைக்கிறார். ‘இன்றைய சூழலில் காதலால் பல ஆணவக் கொலைகள் அரங்கேறுகின்றன. அந்தக் குடும்பங்கள் சந்திக்கும் வலி, அதன்பிறகு அந்த குடும்பங்களின் நிலைமை என்ன ஆகிறது என்பது பற்றியும், […]

சவுண்ட் குறைச்சு வெச்சால் தான் என்ன? ஜிபி முத்து ஆதங்கம்..!

ஜி பி முத்துவின் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகி உள்ளது. சோசியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜி பி முத்து. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார். இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரத்தில் வசித்து வரும் ஜி பி முத்து அவரது வீட்டு பக்கம் இருக்கிற ஸ்கூலுக்கு பக்கத்திலேயே கோவில் இருப்பதாகவும் அதில் […]

திரைப் பிரபலங்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி; ஜனவரி 16-ந்தேதி தொடக்கம்..

திரைப் பிரபலங்கள் பங்குபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளின் உரிமையாளர்களாக திரைத்துறை பிரபலங்கள் உள்ள நிலையில், சென்னை அணியை வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் மற்றும் வேல்ஸ் குழுமங்களின் தலைவர் ஐசரி கே.கணேஷ், நடிகை ப்ரியா ராஜ்குமார் இணைந்து வாங்கியுள்ளனர். இந்த அணிக்கு வேல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். இதன் […]

இயக்குனர் பாலாவின் வாழ்த்திற்கு நன்றி தெரிவித்து சசிகுமார் போட்ட பதிவு.!!

இயக்குனர் பாலா சசிகுமாருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் சசிகுமார் பதில் பதிவு வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் சமீபத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் வந்த வரவேற்பு பெற்று இருந்தது. இந்த நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்காக சசிகுமார் அவர்களுக்கு சிறந்த நடிகன் விருது வழங்கியதால் இயக்குனர் பாலா அவரைப் பாராட்டி கடிதம் ஒன்றை […]

என் கணவர் இந்து.. ஆனால் நான்? சரண்யா பொன்வண்ணன் லேட்டஸ்ட் ஸ்பீச்..!

சரண்யா பொன்வண்ணன் லேட்டஸ்ட் ஸ்பீச் வெளியாகி உள்ளது. நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். நாயகியாக பிரபலமானதை விட ஹீரோக்களின் அம்மாவாக பல்வேறு படங்களில் நடித்து அசத்தியிருப்பார். இவர் பொன்வண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது கணவர் குறித்தும் மதம் குறித்தும் மனம் திறந்து பேசி உள்ளார் […]

முத்து போட்ட திட்டம், சிக்கினாரா பிஏ?இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து போட்ட திட்டத்திலிருந்து பிஏ சிக்கினாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் யார் கடத்திருப்பார்கள் என்று குடும்பத்தினர் பேசிக் கொண்டிருக்க மீனா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்லுகிறார் உடனே ரோகினி வேண்டாம் என சத்தமாக சொல்ல அனைவரும் ரோகிணியை பார்க்கின்றனர் உடனே அண்ணாமலை ரோகினி சொல்வது தான் கரெக்ட் இப்போதைக்கு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க […]

சுந்தரவல்லி போட்ட திட்டம், நந்தினிக்கு வந்த சந்தேகம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அசோகன் கல்யாணத்திடம் பாலை சுண்ட காய்ச்சி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டு இருக்க அவரும் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க அசோகனும் குடித்துவிட்டு […]