Browsing author

Suresh

ஹீரோவாக நடிக்க வருகிறார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்

தமிழில் சச்சின், மாயாவி, ஆறு, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்பட பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் தேவி ஸ்ரீபிரசாத். தெலுங்கில் ‘புஷ்பா’ உள்ளிட்ட பல படங்களுக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘எல்லம்மா’. இப்படத்தில் நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தாலும், அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. தற்போது ‘எல்லம்மா’ கதையில் தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக […]

விஜய் தேவராகொண்டா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்ஸ்

‘தேங்க் யூ’ படத்துக்குப் பிறகு, நிதின் நடிக்கும் படத்தினை இயக்கவிருந்தார் விக்ரம் கே.குமார். ஆனால், அப்படம் பெரும் பொருட்செலவு காரணமாக கைவிடப்பட்டது. இதனால், தனது அடுத்த கதைகளை பல நாயகர்களிடம் கூறிவந்தார் விக்ரம் கே.குமார். தற்போது அவர் கூறிய கதையொன்று மிகவும் பிடித்திருந்ததால் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. விக்ரம் கே குமார் – விஜய் தேவரகொண்டா இணையும் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பத முடிவாகவில்லை. தற்போது ராகுல் சங்கரந்தியான் மற்றும் ரவி கிரண் […]

சூர்யா நடிக்கும் படத்தில் இணையும் நட்சத்திர ஜோடி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ என்ற படத்தில் சூர்யா நடித்துகிறார் என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் சூர்யா. இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை சூர்யா தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நீண்ட வருடங்கள் கழித்து இதில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும், அவரின் மனைவி நஸ்ரியாவும் சூர்யாவுடன் […]

விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்: விஷால் ஆவேஷம்

தற்போது ‘மகுடம்’ என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்டத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பிலேயே நாயகன் விஷால் – இயக்குநர் ரவி அரசு இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சில காட்சிகளை விஷாலே இயக்கி வந்தார். இதனைத் தொடர்ந்து படத்தில் உள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் பேசி இருவருக்கும் இடையே பிரச்சினையை சரி செய்தார்கள். பின்பும் விஷால் – ரவி அரசு இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறது. இதனால் […]

‘காந்தாரா’ பட வெற்றியில் மக்களுக்கும் பங்கு: ரிஷப் ஷெட்டி பேச்சு

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான படம் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதுவரை 700 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் இந்த வெற்றியை முன்னிட்டு காசிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ரிஷப் ஷெட்டி. அதனைத் தொடர்ந்து தனி விமானத்தில் மதுரை வந்திறங்கி ராமேஸ்வரத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், ‘காசிக்கு போனால் ராமேஸ்வரத்துக்கு வந்துதானே ஆக வேண்டும். […]

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்து வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரமை நடித்த ‘பைசன்’ படம் நாளை 17-ந்தேதி வெளியாகிறது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. […]

லதா ரஜினிகாந்த் மீதான வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு ‘கோச்சடையான்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான மீடியா குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு, சென்னையை சேர்ந்த விளம்பர நிறுவனம் ரூ.10 கோடியை கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த ரூ.10 கோடிக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை மீடியா குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக கூறியும், அதற்கு உத்தரவாதம் அளித்த லதா ரஜினிகாந்த் மீதும் பெங்களூரு கோர்ட்டில் விளம்பர நிறுவனம் […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் தேதியில் மாற்றமா?

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும், ரிலீஸில் எந்த மாற்றமும் இருக்காது என சொல்லப்படுகின்றது. மேலும், இப்படத்தின் திரையரங்க உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வாங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. ஜனநாயகன் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்க போட்டி நிலவி வருகின்றது. ஒருபக்கம் லலித், ஏ.ஜி.எஸ் மறுபக்கம் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என ‘ஜனநாயகன்’ ரைட்ஸை வாங்க பலர் போட்டி போட்டனர். இதில் லலித் மற்றும் ராகுல் இடையே கடும் போட்டி […]

சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடிக்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை சுந்தர்.சி இயக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பின் ரஜினி-சுந்தர்.சி கூட்டணி இணைய இருப்பதாகவும், இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், ரஜினி-சுந்தர்.சி தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. தற்போது இமயமலையில் இருந்து திரும்பியுள்ள ரஜினி, அடுத்த படத்தை முடிவு செய்ய கதைகள் கேட்டு வருகிறார். இப்போதுவரை ரஜினி-கமல் இணைந்து நடிக்கவுள்ள படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி […]

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்ஸ்

விக்ரம் நடித்து வெளியான ’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, அப்படங்கள் தொடங்கப்படாமல் இருக்கின்றன. இதனால், விக்ரமின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால், அடுத்ததாக அறிமுக இயக்குநர் ஒருவரது இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஷ்ணு எடவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விக்ரம். இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். […]