Browsing author

Suresh

ரவிமோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கில், இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

நடிகர் ரவிமோகன்-ஆர்த்தி டைவர்ஸ் கேஸில், இன்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: மலர்ந்திருக்கும் இந்த புதிய 2025-ம் ஆண்டில் நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை “ரவி மோகன்” என மாற்றியுள்ளார் என்பது தெரிந்ததே. மேலும், தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை அறக்கட்டளையாக மாற்றி, அதன் மூலம் பலருக்கு உதவி செய்ய உள்ளதாகவும், இந்த ஆண்டு தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளதையும் தனது அறிக்கையின் மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு […]

காக்க காக்க, வாரணம் ஆயிரம் படம் கொடுத்த என்மேல சூர்யாவுக்கு நம்பிக்கை வரலை: கவுதம் மேனன் கடும் விமர்சனம்..

நடிகர் சூர்யா மீது கௌதம் வாசுதேவ் மேனன் கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளார். இவர்களிடையே நடந்தது என்ன? இது பற்றிப் பார்ப்போம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் வரும் 23-ந்தேதி வெளியாகவுள்ள திரைப்படம் டாம்னிக் தி அன்ட் லேடீஸ் பர்ஸ். இந்நிலையில், சூர்யா குறித்து, கௌதம் மேனன் பேசுகையில், ‘சூர்யாவிடம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதையை சொன்னேன். அவர் கதையைக் கேட்டுவிட்டு, இந்தப் படத்திற்கு என்ன ரெஃபரன்ஸ் எனக் கேட்டார். நான் […]

விஜய்யின் கடைசிப் படத்தில் நடித்த மமிதா பைஜூ; செம குஷியான தகவல்..

‘ப்ரேமலு’ படம் மூலம் பிரபலமான மமிதா, விஜய்-69 படத்தில் நடித்தபோது நிகழ்ந்த மகிழ்வான தருணங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்துப் பார்ப்போம்.. விஜய் தற்போது ‘தளபதி-69’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். எச்.வினோத் இயக்க, அனிருத் இசையக்கிறார். படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் ‘தளபதி-69’ ஒரு ரீமேக் படம் என்ற தகவலும் பரவலாக இருந்து வருகின்றது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் […]

நான் அழுததற்கு காரணம் வரலட்சுமிதான்: விஷால் ஓபன் டாக்..

‘தான் கண்கலங்கியதற்கு வரலட்சுமி காரணமாக இருந்தார்’ என விஷால் கூறிய நிகழ்வு காண்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் 13 வருடங்கள் கழித்து ரிலீஸானாலும், படம் வெற்றியடைந்துள்ளது. படத்தில் ஆக்‌ஷன், கிளாமர், சென்ட்டிமென்ட், காதல், காமெடி என அனைத்துமே ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆதலால், குடும்பத்துடன் பார்த்து மகிழ்கின்றனர். படத்தில், மனோபாலாவை வைத்து விஷாலும், சந்தானமும் அடித்த லூட்டிகளால் தியேட்டர்களில் கைத்தட்டல்கள் பறந்தன. இதனால், பல திரையரங்குகளில் வேறு படங்களை தூக்கிவிட்டு, […]

இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் மரணம்: இன்று திரைப் பிரமுகர்கள் அஞ்சலி..

தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜெயமுருகன் மரணமடைந்தார். அவரது உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜெயமுருகன் முத்துச்சாமிக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயரிழந்துள்ளார் என்ற செய்தி திரைவட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ஜெயமுருகன், முதலில் தயாரித்த படம் சிந்து பாத். கடந்த 1995-ம் ஆண்டு இயக்குநர் பாலு ஆனந்த் இயக்கத்தில் மன்சூர் அலிகான் லீடு ரோலில் நடித்து வெளியானது. […]

என்னை பத்தி வெச்சுக்காத வதந்தி, எரிஞ்சு சாம்பலாயிடுவ: சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்-2 டீசர் ‘டூப்பா?’ பதிலடி..

சூப்பர் ஸ்டார் ரஜினி வாய்ஸ்ல சொல்லணும்னா ‘இது நெருப்புடா, என்னை பத்தி எங்கேயும் வெச்சுக்காத வதந்தி.. எரிஞ்சு சாம்பலாயிடுவ’. அதாவது விஷயத்திற்கு வருவோம்.. ரஜினியின் ‘ஜெயிலர்’ பட மாஸான வெற்றிக்குப் பின்னர், ஜெயிலர் 2 குறித்து ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. எனவே படக்குழுவும் ‘ஜெயிலர்’ படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்க முடிவு செய்தார்கள். தற்போது ரஜினி ‘கூலி’ படத்தில் நடித்து வருகின்றார். படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸாகும் என கூறப்படுகின்றது. இதற்கிடையில், கடந்த ஆண்டில் சூப்பர் […]

நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்திய மர்ம நபர்; 24 மணிநேரத்தில் கைது; விசாரணை விவரம்..

பாலிவுட் முன்னணி நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய மர்ம நபரை, மும்பை போலீஸார் துரித நடவடிக்கையில் விரைந்து கைது செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு: சயிப் அலிகான், நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர், மும்பையில் பந்த்ராவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். ஜனவரி 16-ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சயிப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் மிகப்பெரிய […]

ஷங்கரின்’ கேம் சேஞ்சர்’ படம் குறித்து, தயாரிப்பாளர் அதிர்ச்சி பதிவு..

3 வருடம் அயாராது உழைத்து உருவாக்கப்பட்ட ‘கேம் சேஞ்சர்’ படம் குறித்து, தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன் 2’ ரிலீஸாகி அதிக ட்ரோல்களை சந்தித்தது. இதனையடுத்து, தற்போது தமிழ், தெலுங்கு மொழியில் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸாகியுள்ளது. ராம்சரண், எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, சுனில், ஜெயராம் உள்பட பலர் நடிப்பில் உருவான இப்படத்தை தில் ராஜு தயாரித்தார். இப்படம் […]

என்னுடைய மகன் நடிக்கும் படத்தை இயக்குகிறேன்: திருவண்ணாமலையில் இருந்து ரவிமோகன்..

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற வாசகம் போல, இன்று திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த ரவியின் தன்னம்பிக்கை வார்த்தைகள் பார்க்கலாம்.. ஜெயம் ரவி என்ற ரவி மோகன் நடிப்பில் ‘பிரதர்’ படம் வெளியாகி பெரியளவில் ஓடவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரிலீஸான ‘காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரவி, நித்யா மேனன் இடையேயான பொருத்தம் ரொமான்டிக் காய் பழுத்து இனிப்பை தந்திருக்கிறது. தற்போது, சுதா கொங்கரா […]

பாலகிருஷ்ணாவுடன் நடன சர்ச்சை: நடிகை ஊர்வசி ரவுதெலா ஹாட்டான ‘கலை’ விளக்கம்..

நடிகை ஊர்வசி ரவுதெலாவின் சர்ச்சையான ஆட்டத்திற்கு, அவர் கலையுணர்வுடன் வழங்கிய வாய்மொழி காண்போம்.. அதாவது, பாபிகோலி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள திரைப்படம் ‘டாகு மகாராஜ்’. பாபி தியோல், பிரக்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்பட பலர் நடித்துள்ளனர். நாகவம்சி தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். கடந்த12-ம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியானது. தமிழகத்தில், இப்படம் (தமிழில்) டப் செய்யப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை வெளியானது. முன்னதாக, இதனை இயக்குநர் நெல்சன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தெலுங்கில் வெளியாகி […]