Browsing author

Suresh

கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்: ‘ஜனநாயகன்’ படக்குழு கோர்ட்டில் வாதம்..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஜனவரி 9-ந்தேதி வெளி​யிட திட்​ட​மிட்​டிருந்​தனர். ஆனால், படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுத்த மத்​திய தணிக்கை வாரி​யம், படத்தை மறுஆய்​வுக்கு அனுப்​பியது. இதை எதிர்த்து கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிப்பு குழு தரப்​பில் உயர் நீதி​மன்றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜன​நாயகன்’ படத்தை மறுஆய்வு குழு​வுக்கு பரிந்​துரை செய்த தணிக்கை வாரிய தலை​வர் உத்​தரவை ரத்து செய்​தார். இந்த உத்​தரவை […]

ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் தனுஷ்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் தான் நடித்திருப்பதை உறுதி செய்துவிட்டார் விஜய் சேதுபதி. ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கிறாரோ அவர் என பேசப்பட்ட நிலையில் கவுரவத் தோற்றத்தில் வருவதாக கூறியிருக்கிறார். பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்து தெரிய வந்ததும் ரசிகர்களுக்கு தனுஷ் நினைவு வந்திருக்கிறது. தன் தலைவர் படத்தில் ஒரு காட்சியிலாவது வந்துவிட வேண்டும் என்று […]

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் படத்தில் 2 ஹீரோயின்ஸ்..

லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களில் நடித்து ஹாட்ரிக் வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்திற்காக பிரதீப்பும் டிராகன் படத்திற்காக அஸ்வினும் ரஜினியிடம் பாராட்டு பெற்றனர். பிரதீப் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அடுத்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் பிரதீப் நடிக்கவுள்ளார். இப்படத்தை அவரே இயக்கவும் […]

‘ராமாயணம்’ படத்திற்கு இசையமைப்பது பற்றி ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சிப் பேச்சு..

வால்மீகி எழுதிய ‘ராமாயணம்’ கதையை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் பல திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. மேடை நாடகம் முதல் 3டி தொழில்நுட்பம் வரை ராமாயண கதை தலைமுறைகளை கடந்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவ்வகையில், மிகப்பெரிய பொருட்செலவில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். ராவணன் கதாபாத்திரத்தை யாஷ் ஏற்றுள்ளார். இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கும் […]

‘த மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் கதை என்ன தெரியுமா?

நகைச்சுவைப் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பது தெரிந்ததே. அதன் பாதையில் உருவாகவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. பி.ஜே.கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர்சிங் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’. காமெடி கலந்த ஃபேமிலி படமாக இப்படம் உருவாகிறது. இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் அஹ்மத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். ‘பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற […]

20 வயதில் நிகழ்ந்த கசப்பான அனுபவம்: தமன்னா ஓபன் டாக்..

நடிகை தமன்னாவின் திரையுலகப் பயணம் இரண்டு சகாப்தங்கள் கடந்தபோதும் தனது மாஸை இழக்காமல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போதுள்ள நடிகைகளுடன் போட்டியிட்டு நடிப்பதுடன், சிறப்புப் பாடல்கள் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமன்னா ஒரு சிறப்புப் பாடலில் நடிக்க சுமார் ரூ. 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவரது ஆட்டத்தில் ரஜினியின் ‘கூலி’ படப்பாடல் ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில், 20 வயதில் தான் சந்தித்த ஒரு கசப்பான அனுபவத்தைப் பற்றி அவர் […]

குடியரசு தினத்தை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ்?

விஜய் நடிப்பில் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்தை கே.வி.என். நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ஜனவரி 9-ந்தேதி ரிலீஸ் செய்ய அறிவித்தார்கள். ஆனால், படத்திற்கு சென்சார் சான்று கிடைக்காமல் இருந்ததுடன், மறு ஆய்வு குழுவுக்கு படத்தை பரிந்துரை செய்தது தணிக்கை வாரியம். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என். ப்ரொடக்சன்ஸ் நிறுவனம். அந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9-ந்தேதி வழங்கப்படும் என தனி நீதிபதி பி.டி. ஆஷா […]

அருள்நிதி நடிக்கும் ‘அருள்வான்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

அருள்நிதி நடித்துள்ள ‘அருள்வான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘தேன்’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கணேஷ் விநாயக். அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கி வந்தார். இதன் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. ‘அருள்வான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். […]

கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் ‘யூத்’ படத்தின் அப்டேட்ஸ்..

கருணாஸின் மகன் கென் கருணாஸின் படம் பற்றிப் பார்ப்போம்.. பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கென் கருணாஸ், சில மாதங்களுக்கு முன்பு தானே இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்துக்கு ‘யூத்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு திரையுலகினர் பலரும் கென் கருணாஸுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என […]

‘மரகத நாணயம்-2’ படத்தின் அப்டேட்ஸ்..

ஒரு திரைப்படம் வெற்றிபெற்று, ரசிகர்களை ஈர்க்கும் நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது. அவ்வகையில் மரகத நாணயம் படம் பற்றிப் பார்ப்போம்.. ‘மரகத நாணயம் 2’ படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மரகத நாணயம்’. இதன் 2-ம் பாகத்தின் பேச்சுவார்த்தை நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்தும் முடிவாகி ‘மரகத நாணயம் 2’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக வீடியோவினை லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் […]