Browsing author

Suresh

கெட்ட பையன் சார் இந்த காளி: இயக்குனர் செல்வராகவன் பதிவு

வலைத்தளங்களில் வாழ்வியல், தத்துவம், போதனை என அவ்வப்போது பதிவிட்டு வரும் செல்வராகவன், தற்போது வெளியிட்டுள்ள தகவல் காண்போம்.. இயக்குனர் செல்வராகவன் ரஜினியின் ‘முள்ளும் மலரும்’ படத்தின் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பற்றிப் பார்ப்போம். செல்வராகவன் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், ‘ஒரு கையை இழந்த நிலையில் ரஜினி சரத்பாபுவிடம் பேசுவதாக அமைந்த காட்சிகளை பதிவிட்டுள்ளார். இரண்டு கை, இரண்டு கால்கள் இல்லை என்றாலும் பிழைத்துக் கொள்வான், கெட்ட பையன் சார் இந்த காளி’ என்று ரஜினி கூறுவதாக […]

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்துக்கு காரணம் நானா?: நடிகை திவ்யபாரதி விளக்கம்

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவு தொடர்பாக, நடிகை திவ்யபாரதி கூறிய விளக்கம் பார்ப்போம்.. ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி விவாகரத்துக்கு காரணம் ‘பேச்சிலர்’ பட நடிகை திவ்யா பாரதி என கூறப்பட்டது. இந்த விஷயத்துக்கு, ஜி.வி. பிரகாஷ் தரப்பில் இருந்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது. ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாலும், தொடர்ந்து இசை நிகழ்ச்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஆண்டு வெளிநாட்டில் நடந்த ஜிவியின் ம்யூசிக் கான்சர்ட்டில், சைந்தவி தன் மகளுடன் பங்கேற்றார். இதை தொடர்ந்து இருவரும் மீண்டும் மனம் மாறி […]

வெற்றிமாறன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

கூலி, ஜெயிலர்-2 படங்களுக்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தை இயக்குபவர் யார்? என்ற தகவல் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து முடிந்த பின், 3 மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளார். அந்நேரத்தில் தன்னுடைய சுயசரிதையை புத்தகமாக எழுதவும் திட்டமிட்டுள்ளார் பின்னர், நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர்-2 ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இதன் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இரண்டு படங்களை முடித்த […]

பார்த்திபன்-எஸ்.ஜே.சூர்யா-வடிவேலு நடிக்கும் காமெடி படம் ரெடி: தயாரிப்பாளர் யார்?

‘தயாரிப்பாளர் ரெடியானால், பக்கா காமெடி அட்டகாசம் பார்க்கலாம்’ என்கிறார் பார்த்திபன். இது பற்றிய தகவல் இப்ப பார்க்கலாம்.. சுந்தர். சி இயக்கத்தில் ‘கேங்கர்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு. மேலும், பிரசாந்த்துடன் இணைந்து ‘வின்னர்-2’ படத்திலும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பார்த்திபன் மற்றும் வடிவேலு ஆகியோர் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வெளியிட்டுள்ளார். விரைவில், இருவரும் இணைந்து நடிக்கும் படம் வரப்போவதாக அறிவித்துள்ளார். பார்த்திபன் கடந்த […]

லோகேஷ் இயக்க, சூர்யா நடிக்கும் ‘ரோலக்‌ஸ்’ திரைப்படம்

5 நிமிடம் வந்து ஆர்ப்பரித்த ‘ரோலக்ஸ்’ கேரக்டர், முழு நீள படமாக உருவாகவிருக்கிறது. இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ ஷூட் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை சூர்யாவே தன்னுடைய 2டி நிறுவனம் மூலம் தயாரித்தும் உள்ளார் வருகிற மே மாதம் 1-ந் தேதி, இப்படம் திரைக்கு வருகிறது. இதனையடுத்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘பேட்டைக்காரன்’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். […]

100% உதவித்தொகையுடன் வெற்றிமாறன் சினிமா கல்லூரியில் மாணவர் சேர்க்கை: முழு விவரம்

சினிமா கற்க விரும்பும் ஆர்வலர்கள் அதிகரித்து வரும் நிலையில், இதோ ஓர் தகவல்.. சினிமா பற்றி படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு வெற்றிமாறன் சினிமா கல்லூரியானது அதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. இயக்குனர் வெற்றிமாறன், தான் இயக்கிய எல்லா படங்களையும் ஹிட் கொடுத்து சாதனை படைத்துள்ளார். அதில், பொல்லாதவன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி, ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை 1 மற்றும் விடுதலை 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தனுஷை வைத்து மட்டும் 4 […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ஹீரோயின் ரஜினியின் ‘கூலி’ படத்தில் குத்தாட்டம்

தமன்னா ஆடிய ‘காவலா’ ஹாட் ஸாங் போல ‘கூலி’ படத்தில் பாடலொன்று தெறிக்கவிருக்கிறது. இது பற்றிக் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்திற்கு அனிருத் இசையமைக்க, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற, இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து குத்தாட்டம் போட உள்ளார். முன்னதாக, ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலைப் போல் இப்பாடல் செம […]

இப்படியொரு கதை எந்த படத்திலும் வந்ததில்லை: ஜோதிகா பெருமிதம்

ஜோதிகா நடித்த வெப் சீரிஸ் வரும் 28-ந்தேதி ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. ஜோதிகா தற்போது பாலிவுட்டில் பிஸியாகி வருகிறார். கடந்த ஆண்டு அஜய் தேவ்கன் ஜோடியாக ‘சைத்தான்’ படத்தில் நடித்தார். ஸ்ரீகாந்த் என்கிற பாலிவுட் படத்திலும் நடித்திருந்தார். இப்போது ‘டப்பா கார்டெல்’ மற்றும் ‘லயன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘டப்பா கார்டெல்’ பட விழாவில் ஜோதிகா தெரிவித்ததாவது: ‘காதல் தொடர்பான படங்கள், ஹீரோக்களுடன் இணைந்து டூயட் பாடுவது போன்ற படங்களில் நடிப்பதையெல்லாம் […]

வெங்கியை அடுத்து சந்து?: சூர்யா படங்களை இயக்கும் தெலுங்கு பட இயக்குனர்கள்

‘கங்குவா’ படத்திற்கு பிறகு, கதைத்தேர்வில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அவ்வகையில், தெலுங்கு திரையுலக இயக்குனர்கள் இருவர் பற்றிக் காண்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், லவ் அன்ட் ஆக்சன் ஜானரில் ‘ரெட்ரோ’ திரைப்படம் உருவாகி உள்ளது. சூர்யாவின் 2டி நிறுவன தயாரிப்பான இப்படம் வருகிற மே மாதம் 1-ந் ரிலீஸா உள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் […]

மும்மொழிக் கல்வி குறித்து? வைரலாகும் ரஜினிகாந்த் வாய்ஸ்

இன்றைய மும்மொழிக் கல்விச்சூழலில், முன்னதாக சூப்பர் ஸ்டார் தன் மனதில் பட்டதை தெரிவித்த கருத்து வைரலாகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். மேலும் மணிரத்னத்துடன் ஒரு படத்தில் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், முன்னதாக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து தற்போது வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அதாவது, ஒரு விழாவில் ரஜினி கூறியதாவது: ‘எந்த […]