Browsing author

Suresh

‘மர்மர்’ பட புரொமோஷன் குறித்து, இயக்குனர் ஹேம்நாத் சவால்..

ரசிகர்கள் ரொம்ப உஷார். இதில், போலியான விளம்பரங்கள் எல்லாம் எடுபடாது. படம் பிடித்திருந்தால் ரிபீட் ஆடியன்ஸாகவும் வருவர். அவ்வகையில், ‘மர்மர்’ படம் பற்றிய பரபரப்பு தகவல் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் மூவியாக உருவாகி வெளியான ‘மர்மர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. முதற்கட்டமாக இந்தப் படம் 100 திரைகளில் மட்டுமே வெளியானது. பின்னர், ரிலீசான 2-வது நாளில் திரைகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது. தொடர்ந்து இந்தப் படம் வரவேற்பை […]

கவர்ச்சி அனல்: ‘ராபின்ஹூட்’ படத்தில் ஸ்ரீலீலாவை மிஞ்சிய கெட்டிகா..

‘என் வழி ஸ்ரீலீலா வழி’ என முடிவெடுத்துள்ளார் கெட்டிக்கார நடிகை கெட்டிகா. இது பற்றி எரியும் நியூஸ் பார்ப்போம்.. ‘புஷ்பா’ படத்தில் ஸ்ரீலீலா தெறிக்கவிட்ட ஆட்டம் ரசிகர்களை தரமாக கவர்ந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பறந்து ஸ்ரீலீலா நடித்து வருகிறார். அவ்வகையில் அல்லது ஸ்ரீலீலா வழியில் தற்போது வெங்கி குடுமலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ‘ராபின்ஹூட்’ என்ற படத்தில் ஸ்ரீலீலா நடிக்க, கெட்டிகா சர்மா கலக்கியிருக்கிறார் இப்படத்தில், ராஜேந்திர பிரசாத், ஷைன் டேம் சாக்கோ, […]

ரவி மோகன் இயக்கத்தில் யோகிபாபு ஹீரோ: பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் மற்றும் “இயக்குனர்” ரவிமோகன் பற்றிய அப்டேட் காண்போம்.. தமிழ் சினிமாவில் காலம் கடந்து எடுத்தாலும், ரவிமோகனின் மாற்றங்கள் ஆக்கப்பூர்வமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயரை மாற்றினார். வில்லனாக நடிக்க தீர்மானித்துள்ளார். தற்போது அண்ணன் ராஜாவைபோல டைரக்டராகவும் களம் இறங்கியுள்ளார் ஜெயம் ரவி என்ற பெயரை மாற்றியுள்ள ரவிமோகன். ரவி மோகன் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ யார் என்பது தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்நிலையில் கோமாளி, காதலிக்க நேரமில்லை, சைரன் […]

இந்த வாரம் ஓடிடி. தளத்தில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் தமிழ், தெலுங்கு, மாலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம். * தெலுங்கு திரைப்படமான ‘ஏஜெண்ட்’ இயக்குநர் சுரேந்தர் ரெட்டியால் இயக்கப்பட்டுள்ளது. இதில், மம்முட்டி, சாக்சி வைத்யா, அகில் அக்கினேனி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் மற்றும் திரில்லராக உருவாகிவுள்ள இப்படம் சோனி லைவ் ஓடிடி-யில்  வெளியாக உள்ளது. * கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘காதல் என்பது பொதுவுடைமை’. இப்படத்தை ஜெயபிரகாஷ் […]

அனுபமாவுடன் சமந்தா நடிக்கும் ‘பரதா’ படம், சர்ச்சையில் சிக்குமோ?

படத்துக்கும் விளம்பரம் கிடைக்கும், படத்தைப் பேசி விவாதிப்போருக்கும் விளம்பரம் கிடைக்கும். இதெல்லாம் மாறாது. விஷயத்திற்கு வருவோம்.. ‘பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன். அப்பட வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் தனுஷ் உடன் ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில், ‘கார்த்திகேயா – 2′ , ’18 பேஜஸ்’, ‘டில்லு ஸ்கொயர்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ படத்தின் கீர்த்தி என்ற […]

அண்ணன் இல்லன்னா தம்பி?: கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி..

‘அண்ணன் இல்லன்னா தம்பி’ என்ற கதையாக, ஒரு கதை ஓகே ஆகியுள்ளது. இக்கதை பற்றிப் பார்ப்போம்.. கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியாரே’ திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதையடுத்து மித்ரன் இயக்கும் ‘சர்தார்-2’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் […]

நாளை அமீர்கான் பிறந்த நாள்: ஷாருக்-சல்மான் செம டான்ஸ்; வைரலாகும் நிகழ்வு

பாலிவுட் புகழ் 3 கான்களின் ஆட்டம் தற்போது வைரலாகிறது. இது பற்றிய தகவல் பார்ப்போம்.. பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் மூவரும் கலெக்‌ஷன் மேக்கர்கள் என்பது தெரிந்ததே. இந்நிலையில், சல்மான்கான் நடிப்பில் ரமலான் அன்று ‘சிக்கந்தர்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படம் தமிழில் வெளியான சுல்தான், சர்கார் படங்களின் ரீமேக் என கூறப்படுகிறது. இச்சூழலில், அமீர்கான் நாளை மார்ச் 14-ம் தேதி தனது 60-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். முன்னதாக […]

விஜய்யின் ‘கோட்-2’ உருவாகுமா?: இயக்குனர் வெங்கட் பதில்

விஜய்யின் ‘கோட்’ 2-ம் பாகம் எடுக்க வாய்ப்புள்ளதா என்பது பற்றிய அப்டேட் பார்ப்போம்.. வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘கோட்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள். இப்படத்தில் விஜய் உடன் பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்பட பலர் நடித்திருந்தனர். யுவன் இசையமைத்திருந்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் தமிழகத்தில் 100 கோடி ஷேர் தொகையாக வசூல் […]

‘ஜனநாயகன்’ விஜய்க்கு நாளை மறுநாள் முதல், மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு

தவெக தலைவர் விஜய்க்கு, மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு வருகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. விஜய் நடிப்பில் அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பு கருதி அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், எப்போது முதல் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. […]

ரஜினியின் ‘கூலி’ பட டீசர் நாளை மறுநாள் வெளியீடு?

ரஜினியின் ‘கூலி’ பட டீசர் வெளியீடு எப்போது என பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படத்தின் ஷூட் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது. குறிப்பாக, ரஜினி போர்ஷன் முடிந்தது. அனிருத் இசையமைப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள படக்குழு, அப்படத்தின் அப்டேட்டுகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்ட […]