Browsing author

Suresh

ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த அனுபவம் கிடைத்தது: ‘குட் பேக் அக்லீ’ ஆதிக் அப்டேட்

‘தல’ அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சில அப்டேட்கள் தெறிக்க விட்டுள்ளார். வாங்க.. பார்ப்போம்.. ‘குட் பேக் அக்லீ’ படத்தில் அஜித்துடன் மீண்டும் இணைந்துள்ளார் திரிஷா. மேலும் பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப்பில் ரசிகர்களை வைத்திருக்கும் வகையில், நாள்தோறும் ‘குட் பேட் அக்லீ’ தொடர்பாக அப்டேட்டுகள் […]

அரசியல் ஆடுகளம்: ‘ஜனநாயகன்’ படத்தை எதிர்கொள்ள ‘பராசக்தி’ பராக் பராக்

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமை விற்பனையான நிலையில், இப்படம் குறித்த அரசியல் சடுகுடு பார்ப்போம்.. விஜய்யின் 69-வது படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் மமிதா பைஜு, கெளதம் மேனன், பாபி தியோல், டீஜே அருணாச்சலம் என பலர் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். விஜய்யின் கடைசி படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசியல் […]

‘எம்புரான்’ படத்துக்கு எதிராக, நானும் எதிர்க்கிறேன்: சீமான் சீற்றம்

நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் ரிலீஸ் ஆனதில் இருந்து தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்படத்தில் இருந்து சில சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை படக்குழு நீக்க முடிவு செய்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டில் இருந்தும் அப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவ்வகையில், சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ‘இந்திய அளவில் பல்வேறு மொழியில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாப்பற்றது போல அவதூறாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மலையாள […]

வடிவேலு-பகத்பாசில் இணைந்து நடித்த ‘மாரீசன்’ எப்போது ரிலீஸ் தெரியுமா?

ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ள 98-வது படம் பற்றிப் பார்ப்போம்.. மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலுவும் பகத் பாசிலும் இணைந்து நடித்த ‘மாரீசன்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு தேதியை பகத் பாசில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, இப்படம் (தேதி குறிப்பிடாமல்) வரும் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகத் பாசிலும் வடிவேலுவும் நேருக்கு நேர் நிற்கும் போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது. ‘மாரீசன்’ […]

ஹீரோ-வில்லன் இருவருமே வலுவானவர்கள்: ‘சர்தார்’ கார்த்தி அப்டேட்

சர்தார்-2 படத்தின் அப்டேட்டாக, கார்த்தி தெரிவித்த தகவல் காண்போம்.. மித்ரன் இயக்கத்தில் வெளியான ‘சர்தார்’ படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து ‘சர்தார் 2’ உருவாகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் முதல் தோற்ற புரொமோ வீடியோ வெளியீட்டு விழாவும் நடந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவ்வகையில், ‘சர்தார்-2’ படம் குறித்து கார்த்தி தெரிவிக்கையில், ‘சர்தார்’ என்று பெயர் வைத்ததில் […]

விஜய்யின் தந்தை எஸ்ஏசி தனிக்கட்சி தொடங்குகிறார்; தவெக ரியாக்‌ஷன் என்ன?

எஸ்.ஏ.சந்திரசேகர் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. விஜய் நடிக்கும் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ரிலீஸாக இருக்கிறது. இதற்கிடையே, விஜய் வளர்ச்சியில் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் உழைப்பும் தெரிந்ததே. இச்சூழலில், இருவருக்கும் அரசியல்ரீதியாக இடைவெளி ஏற்பட்டது. அதற்கு காரணமாக, தற்போது, தவெகவின் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்தான் என சொல்வதுண்டு. இருப்பினும், விஜய் தனது தாயையும் தந்தையையும் அடிக்கடி […]

‘தல’ அஜித் நடிக்கும் 64-வது படத்தின் நியூ லுக்?: வைரலாகும் கேள்விகள்

‘தல’ அஜித்தின் 64-வது படத்திற்கான நியூ லுக் ஒத்திகையா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இது குறித்துப் பார்ப்போம்.. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லீ’ படத்தின், டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அஜித், பல கெட்டப்பில் தெறிக்கவிட்டிருந்தார். மேலும், படத்தின் கதைக்களம் குறித்து வந்த தகவலின்படி, “கெட்டவனாக வாழும் அஜித், நல்லவனாக வாழ முயற்சிக்கும் நிலையில், அவர் எதிர்கொள்ளும் பிரச்சினையே படத்தின் கதைக்களம்” ஆகும். படத்தில் […]

இரவு நேரத்தில் பைக்கில் கீர்த்தியுடன் தனுஷ் டிராவல்: வைரலாகும் நிகழ்வுகள்

சில வருடங்களாக அடுத்தடுத்த கமிட்மென்ட்களில் தனுஷ் தன்னை மிக பிஸியாக வைத்திருக்கிறார். அவ்வகையில் அவரது பாலிவுட் ஷுட் அப்டேட் பற்றிப் பார்ப்போம்.. தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் முடிவடைந்த நிலையில், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் தேரே இஸ்க் மெஸ்க் (Tere Ishk Mein) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஒரு மாதமாக, இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்றதை அடுத்து, தற்போது டெல்லியில் லவ் சீன் படமாக்கப்பட்டு […]

‘காந்தக் கண்ணழகி’ மோனாலிசா பாலியல் புகார்: இயக்குனர் சரோஜ் மிஸ்ரா கைது

கும்பமேளாவில் காந்த கண்களால் வைரலான மாலை விற்ற பெண் மோனாலிசா என்பது தெரிந்ததே. இவருக்கு சினிமா வாய்ப்பளித்த பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா, தற்போது பாலியல் ரீதியாக பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகிய சனோஜ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சனோஜ் மிஸ்ராவை கைது செய்துள்ளனர். அந்த பெண் கொடுத்துள்ள புகாரில், நடிகையாக வாய்ப்பு கேட்டு வந்த தன்னை ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் தான் […]

நம்ம ஊரு மக்களுக்கும் புரிகிற மாதிரி பொழுதுபோக்கு படம்: சர்தார்2 பற்றி எஸ்.ஜே.சூர்யா

கார்த்தி நடித்த ‘சர்தார்-2’ படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா தெரிவித்த தகவல்கள் பார்ப்போம்.. பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள சர்தார்2 ப்ரோமோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, ‘சர்தார் 2 படத்தின் கதையை மித்ரன் என்னிடம் சொன்னதுமே, நான் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால், நான் நடிக்கும் அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலான கதாபாத்திரமாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குனர் உருவாக்கிய விதம், […]