Browsing author

Suresh

அமிதாப்பச்சனின் ‘க்ரோர்பதி’ நிகழ்ச்சி: பரிசை வெல்ல ரசிகர்கள் ஆர்வம்

க்ரோர்பதி நிகழ்ச்சியில் மீண்டும் அமிதாப் தொகுப்பாளராக இணைகிறார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. பாலிவுட்டில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘கோன் பனேகா க்ரோர்பதி’ 17-ஆவது சீசனில் கலந்து கொள்வதற்கான ரெஜிஸ்டேஷன் ஏப்ரல் 14-ந்தேதி முதல் தொடங்குகிறது. இத்தகவலை, சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் உறுதி செய்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் அமிதாப் பச்சன் தொகுப்பாளராக மாறவுள்ளார். ரசிகர்கள் தங்களது திறமையை நிரூபித்து பெரிய பரிசை வெல்ல தயாராகி வருகிறார்கள். கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சி 17 ஜூலை அல்லது […]

நடிகை ஹன்சிகாவின் குடும்ப வன்முறை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஹன்சிகா தாக்கல் செய்த மனுவுக்கு, கோர்ட் பிறப்பித்த உத்தரவு காண்போம்.. நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு இந்தி சின்னத்திரை நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸை காதலித்து திருமணம் செய்தார். இதற்கிடையே, ஹன்சிகா, தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரைக் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாட்களுக்குள் அவருடைய சகோதரர் பிரசாந்த், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி, மனு தாக்கல் […]

‘குட் பேட் அக்லி’ டிரைலருக்கு போட்டியாக, ஆத்விக் ரேஸிங் டீசர்?: ரசிகர்கள் உற்சாகம்

அஜித்தின் மனைவி ஷாலினி பகிர்ந்த நிகழ்வு வைரலாகி தெறிக்கிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இதனை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. வழக்கம்போல, படத்திற்கான புரமோஷனில் கலந்துகொள்ளாத அஜித், தற்போது பேமிலியோடு நேரத்தை கழித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கார் ரேஸில் கலந்து […]

இந்த செய்தியை பார்த்து மனமுடைந்து போனேன்: நடிகை ராஷ்மிகா கவலை

தெலுங்கானா அரசு எடுத்துள்ள முடிவு குறித்து, ராஷ்மிகா கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றிக் காண்போம்.. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு கவலை. அதில், ராஷ்மிகா கவலை பொதுவாழ்வு கொண்டது.நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சிக்கந்தர்’ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக ‘குபேரா’ படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், […]

ராஜமவுலி-மகேஷ்பாபு படத்தின் ஷுட்டிங் அப்டேட்

ராஜமவுலி தற்போது இயக்கும் படத்தின் அப்டேட் பார்ப்போம்.. பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படங்களை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் பிரம்மாண்ட படம் தயாராகி வருகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவுமின்றி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தினை ஒரு பாகமாக மட்டுமே எடுக்க முடிவு செய்திருக்கிறார் ராஜமவுலி. ஏனெனில், பலரும் இரண்டு பாகங்களாக உருவாக்கி வருவதால், அதில் நாமும் இணைய வேண்டாம் என முடிவெடுத்துள்ளார். முன்னதாக ‘பாகுபலி’ படத்தின் மூலம் இரண்டு பாகங்கள் […]

தனுஷின் ‘குபேரா’ ரிலீசுக்கு பிறகு ‘இட்லி கடை’ ரிலீஸ்

‘நிலவுக்கு..’ படம் தோல்வியடைந்த நிலையில், ‘இட்லி கடை’ படத்தை வெற்றியாக்கும் முனைப்பில் இருக்கிறார் தனுஷ். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. பன்முகத் திறமை பெற்ற நடிகர் தனுஷ், தனது அக்கா மகன் பவிஷை வைத்து இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைக்கு வந்து படுதோல்வி அடைந்தது. அதே நாளில் ரிலீஸான ‘டிராகன்’ செம ஹிட்டாகி ரஜினியின் பாராட்டும் பெற்றது. இதற்கிடையே அவர் ‘இட்லி கடை’ திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இவருக்கு நித்யா மேனன் […]

காதலனை விட்டு பிரிந்ததற்கு காரணம் என்ன?: நடிகை சானியா ஐயப்பன் விளக்கம்

’22 வயதாகும் சானியாவின் காதல் முறிவுக்கு என்ன காரணம்’ என்ற தகவல் காண்போம்.. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று கவர்ந்தவர் நடிகை சானியா ஐயப்பன். மலையாள படங்களை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் இறுகப்பற்று, ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்த சொர்க்கவாசல் திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது சர்ச்சைகளில் சிக்கிய ‘எம்புரான்’ படத்திலும் சானியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 22 வயதாகும் சானியா தன்னுடைய காதலானது தோல்வியில் முடிந்ததாக கூறியுள்ளார். இதற்கான காரணத்தை […]

‘எம்புரான்’ பட தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ‘ரெய்டு’

‘எம்புரான்’ பட சர்ச்சையை தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகர் பிருத்விராஜ் இயக்கி, மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘எம்புரான்’ ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கிடையே இப்படம் சர்ச்சைகளிலும் சிக்கி, மறு எடிட்டிங்கிற்காக அனுப்பப்பட்டு படத்தில் 24 மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த புதிய பதிப்பு திரையரங்குகளில் வெளியானது. எடிட்டிங்கிற்குப் பிறகு, படத்தின் ஆன்லைன் முன்பதிவில் சரிவு ஏற்பட்டாலும், அது […]

‘குட் பேட் அக்லீ’ பிரிமியர் காட்சிகளால் பட சுவாரஸ்யம் பாதிக்கும்: இணையதள கருத்துகள்

‘குட் பேட் அக்லீ’ படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் வெளியிடப்படும் பிரிமியர் காட்சிகளால் பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அதிர்ப்தியில் இருந்த ரசிகர்களுக்கு ‘குட் பேக் லீ’ படம் செம ட்ரீட்டாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்தில் திரிஷா மீண்டும் ஜோடியாக இணைந்துள்ளார். அஜித்தின் பல கெட்அப்கள் வசீகரிக்கின்றன. ‘இப்படத்தை ஆக்‌ஷன், குடும்ப சென்டிமென்ட் என்ற கலவையில் பழைய ஃபார்மில் […]

வடிவேலுவுக்காக, வழிமீது விழிவைத்து காத்திருக்கிறேன்: நடிகர் ஆர்கே ஃபீலிங்ஸ்..

“வடிவேலு இறங்கி வருவார் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார் ஆர்கே. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. வடிவேலுவின் தெறிக்க விடும் நகைச்சுவையில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் கேங்கர்ஸ்’ படத்தின் டிரைலர் யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில், வடிவேலு தன்னுடைய படத்தில் நடிக்க மறுத்து வருவதாகவும், தான் கொடுத்த அட்வான்ஸ் அவரிடம் உள்ளதாகவும் நடிகர் ஆர்கே பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. வடிவேலு, தற்போது பகத் பாசில் உடன் இணைந்து ‘மாரீசன்’ படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் அந்த […]