Browsing author

Suresh

விக்கி-ராஷ்மிகா நடிப்பில், சூப்பர் ஹிட்டான ‘சாவா’ படம், ஓடிடி.யில் ரிலீஸ்

50 நாட்களை கடந்தும் வரவேற்பு பெற்று வரும் ‘சாவா’ படத்தின் ஓடிடி வெளியீடு பார்ப்போம்.. சத்ரபதி சிவாஜியின் மகனான ஷாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை பற்றி உருவான திரைப்படம் ‘சாவா’. விக்கி கௌஷல் ஹீரோவாகவும், ராஷ்மிகா கதாநாயகியாகவும் நடித்திருந்த இந்த படம், பிப்ரவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் 50 நாட்களை கடந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், முதல் நாளிலேயே வெற்றியை உறுதி செய்யும் […]

தனுஷ் விவகாரம்: நயன்தாரா வழக்கை தொடர்ந்து, தயாரிப்பாளர் கதிரேசன் வழக்கு

சில பிரச்சினைகளை பேசி தீர்க்கலாம். தீராத நிலையில் நீதிமன்றம் செல்ல நேரிடுகிறது. அவ்வகையில் தொடரும் தனுஷ் விவகாரம் காண்போம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் கதிரேசன், மீண்டும் தனுஷை வைத்து ஒரு படம் தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்னதாக அட்வான்ஸ் தொகையாக 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். மீண்டும் வெற்றிமாறனை இயக்குநராக கொண்டு வந்தால், படத்தில் நடிக்கிறேன் என்றும் தற்போது தனது பிசினஸ் பெரிதாக மாறிவிட்டது என கதிரேசன் […]

அஜித்துக்கு எல்லாம் எதற்கு ஏஐ தொழில்நுட்பம்: இயக்குனர் ஆதிக் வியப்பு

அஜித்தின் உடல் எடை குறைப்பு பற்றிய நிகழ்வை, ஆதிக் வியப்புடன் கூறியுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘தல’ அஜித்தின் தீவிர ரசிகரும் ‘குட் பேட் அக்லீ’ பட இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில், குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது மிகவும் சீரியஷான உடல் எடை குறைப்பில் ஈடுபட்டார் அஜித். அது மிகவும் அபாரமானது. எனக்கு தெரிந்து யாரும் அப்படி செய்யமுடியுமா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. ஒருநாளைக்கு ஒரு வேளை உணவு […]

விபத்தில் சிக்கிய பவன் கல்யாணின் மகன் ஆஸ்பத்திரியில் அனுமதி; பரபரப்பு நிகழ்வு

பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் பவன் கல்யாணின் மகன் காயம் அடைந்துள்ளார். இது குறித்த தகவல்கள்.. ஆந்திராவில் நடிகராக மட்டுமின்றி, துணை முதலமைச்சராகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார் பவன் கல்யாண். அவரது நடிப்பில் கடைசியாக ‘ப்ரோ’ படம் வெளியானது. இந்தப் படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘விநோதய சித்தம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கிலும் சமுத்திரகனியே இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து பவன் கல்யாண் ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ‘சாஹோ’ […]

வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் குறித்து, தயாரிப்பாளர் தாணு அப்டேட்

‘அந்த 25 நிமிடங்கள் போதும்’ என வெற்றிமாறனிடம் நான் சொன்னேன் என்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ஜல்லிக்கட்டுப் போட்டியை பின்னணியாக கொண்டு, சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ என்ற படத்தை உருவாக்குகிறார். இக்கதை செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலாகும். ஒரு நாவலை, முன்னணி நடிகரின் நடிப்பில், பண்பாடு கெடாமல் பொருளாதார சரிவு விழாமல் திரைக்கதையாக மாற்றுவதென்பதே சாதனைதான். இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கடந்த ஆண்டு […]

குஷ்புவின் மகள் அவந்திகா, ஷங்கரின் மகள் அதிதியை விட கலக்குவார்: ரசிகர்கள் கணிப்பு

குஷ்புவின் ஜெராக்ஸ்போல வசீகரிக்கும் அவந்திகா எப்போது கதாநாயகி ஆவார்? என்ற தகவல் பார்ப்போம்.. தமிழ்த் திரையுலகில் காதல் திருமணம் செய்து தொடர்ந்து பிஸியாக வலம் வரும் சுந்தர்.சி-குஷ்பு நட்சத்திர தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். இளைய மகள் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றுவதாக தகவல் வெளியானது. மூத்த மகள் அவந்திகா லண்டனில் படித்து வருகிறார். இவர், வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவ்வகையில் அதிக ஃபாலோவர்ஸ் பெற்றிருக்கிறார். […]

ஒரு மாசமா போராடி மீண்டு வந்திட்டேன்: பாடகி ஸ்ரேயா கோஷல் குஷி

குயிலை கூண்டுக்குள் அடைத்ததுபோல, பாடகி ஸ்ரேயாவுக்கு நேர்ந்தது, தற்போது சரியாகி விட்டது. இது குறித்த தொழில்நுட்ப தகவல் பார்ப்போம்.. இந்திய சினிமாவில், இனிய குரல் வளத்தால் சிறந்த பின்னணி பாடகியாக ஜொலித்து வருகிறார் ஸ்ரேயா கோஷல். தேவதை ரகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியிருக்கிறார். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் ஹிந்தியை தவிர வேறு எந்த மொழியும் அவ்வளவாக தெரியாது. எனினும், தனக்குரிய மொழியில் மாற்றியும் புரிந்து உணர்ந்து […]

சாவா-சிக்கந்தர்-எம்புரான்: மக்களால் வரவேற்கப்படும் திரைப்படம் எது தெரியுமா?

வரலாற்றுக் கதையை திரைப்படமாக எடுப்பது முக்கியமல்ல. அது மக்களால் வரவேற்கப்படுகிறதா என்பதுதானே முக்கியம். சரி, விஷயத்திற்கு வருவோம்.. பாலிவுட் சினிமாவில் ‘சாவா’ படம் 50 நாட்களை கடந்தும் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம், மராட்​டிய மன்​னர் சிவாஜி​யின் மகன் சத்​ரபதி சம்​பாஜி​யின் வாழ்க்கை வரலாற்றை அடிப்​படை​யாகக் கொண்டது. லக்‌ஷமன் உடேகர் இயக்கிய இப்படத்தில் விக்கி கவுஷல் சம்பாஜி மகாராஜாவாகவும், அக்‌ஷய் கண்ணா அவுரங்கசீப்பாகவும் நடித்துள்ளனர். அதாவது, முகலாயர்களுக்கு எதிரான மராட்டிய மன்னனின் போராட்டத்தையும், இறுதியில் அவர் கைது […]

விஜய தேவராவுடன் ராஷ்மிகா பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரலாகும் நிகழ்வு

விஜய் தேவராகொண்டா-ராஷ்மிகா இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெற்றி பெற்று, ரசிகர்களை கவர்ந்தது. இருவருமே பிஸியாக இருப்பதால், காதலை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இருப்பினும், டேட்டிங்கில் இருக்கின்றனர். இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரொமான்ஸ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது. இன்ஸ்டாவில், இருவரும் தங்களது புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்துள்ளனர். அதாவது, ஏப்ரல் 5-ந்தேதி ராஷ்மிகாவின் பிறந்த நாள் என்பதால், இருவரும் வெளிநாட்டிற்குச் சென்று பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். அப்போது […]

மாதவன்-நயன்தாரா நடித்த ‘டெஸ்ட்’ படம் ஓடாது: எஸ்.வி.சேகர் அதிரடி பதிவு

ஓடிடி.யில் வெளியான ‘டெஸ்ட்’ திரைப்படம் ஓடாது என கூறியுள்ளார் எஸ்.வி.சேகர். இது பற்றிய தகவல் காண்போம்.. சினிமாவை கடந்து, நாடகங்களில் வாயிலாக நகைச்சுவையில் புகழ் பெற்றவர் எஸ்.வி.சேகர். அரசியலிலும் பாஜகவில் இருந்து விலகி, தற்போது திமுக பக்கம் நிற்பவர். இந்நிலையில் இவர், தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு சினிமா வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘டெஸ்ட்’ படம் தியேட்டரில் […]