Browsing author

Suresh

‘கூலி’ படத்தில் நாகார்ஜூனா கதாபாத்திரம் குறித்து, ரஜினி பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. இதனையொட்டி ஹைதராபாத்தில் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ‘கூலி’ குறித்து ரஜினி பேசிய வீடியோ பதிவு ஒன்று திரையிடப்பட்டது. அதில் ரஜினி, ‘திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எனது ‘கூலி’ திரைப்படம் வெளிவருவதில் மகிழ்ச்சி. ‘கூலி’ எனது […]

கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும்: தனுஷ் கண்டனம்..

‘ராஞ்ஜனா’ என்ற படம் மூலம் தனுஷ் இந்தியில் அறிமுகமானார். 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி இருந்தார். சோனம் கபூர் நாயகியாக நடித்திருந்தார். இது தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், 12 வருடங்களுக்குப் பிறகு ஆக.1-ம் தேதி தமிழில் ரீ ரிலீஸ் ஆனது. படத்தில் தனுஷ் கதாபாத்திரம் இறப்பது போல காட்டப்பட்டிருக்கும். ஆனால், ரீ-ரிலீஸில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனுஷ் உயிரோடு வருவது போல மாற்றப்பட்டுள்ளது. இதற்குப் படத்தின் […]

‘நாயகன்’ பட கமல்ஹாசன் போல ஹெச்.ராஜா: ‘கந்தன் மலை’ இயக்குநர் அப்டேட்ஸ்..

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு ‘கந்தன் மலை’ என தலைப்பு வைத்துள்ளனர். ‘கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் இயக்கியுள்ளார். இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் பற்றி வீரமுருகன் கூறும்போது, ‘திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி நடக்கும் கதை இது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது. இதில், கந்தன் மலை பகுதியின் ஊர் பெரிய மனிதராக ஹெச்.ராஜா நடிக்கிறார். ‘நாயகன்’ படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரம் போல, இதில் அவருடைய கதாபாத்திரம் […]

ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்த முதல் இந்திய திரைப்படம்..

மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் வகையில், மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் 7 அனிமேஷன் படங்கள் உருவாக்கி வருகிறார்கள். இதில் முதல் படமாக ‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் ஜூலை 25-ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக இந்தி மற்றும் தெலுங்கில் இதனைக் கொண்டாடி வருகிறார்கள். மக்களிடையே கிடைத்த வரவேற்பால், இப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்திருக்கிறது. இந்தியாவில் அனிமேஷன் படங்களில் ரூ.100 கோடி வசூலை கடந்த முதல் படம் என்ற […]

விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் ஓடிடி.யில் ரிலீஸ் எப்போது?

தெலுங்கு திரையுலகில் கவுதம் நுன்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போஸ், சத்ய தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘கிங்டம்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், படமும் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. தற்போது, இதன் ஓடிடி வெளியீட்டில் சில மாற்றங்களை செய்யவுள்ளது படக்குழு. ‘கிங்டம்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட ஹிரிதயம் பாடல் மற்றும் ஒரு சண்டைக் காட்சியை சேர்த்து ஓடிடியில் வெளியிட உள்ளார்கள். ஹிரிதயம் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடலாகும். இப்படம் வெளியானவுடன் பலரும் […]

காந்தாரா-3 படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்..

‘காந்தாரா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. அக்டோபர் 2-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இதனையும் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்துள்ளது. ’காந்தாரா’ படத்துக்கு முன் என்ன நடந்தது என்பதை தான் ‘காந்தாரா 2’ ஆக உருவாக்கி இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதனைத் தொடர்ந்து 3-ம் பாகம் உருவாக்கும் திட்டமும் வைத்திருக்கிறார். அதில், ‘காந்தாரா’ படத்துக்குப் பின் […]

விருதுகள், அரசியலாக மாறக்கூடாது: நடிகை ஊர்வசி அதிருப்தி..

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங்), சிறந்த இசைக்​கான விருது ஜி.​வி.பிர​காஷ் குமார் (வாத்தி), சிறந்த கதை வசனத்துக்கான விருது ராம் குமார் பால​கிருஷ்ணன் (பார்க்கிங்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த தமிழ்ப் படமாக ‘பார்க்கிங்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மலையாளத்தில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ படத்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு விருது எதுவும் […]

ரஜினியின் ‘கூலி’ திரைப்படம், அவரது பழைய படக்கதையா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின்’ கூலி’ படமானது, தொழிலாளர் முனையங்களையும், ரகசிய கடத்தல் கும்பல்களையும் பின்னணியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தினக்கூலித் தொழிலாளர்களை துன்புறுத்தும் ஓர் இரக்கமற்ற குற்றப் பின்னணி கும்பலை எதிர்த்துப் போராடும் ஓர் அச்சமற்ற, வறுமைப் பின்னணி கொண்ட ஒரு துறைமுக கூலித் தொழிலாளியைப் பற்றி இப்படம் பேசுகிறது. ஆற்றல், மன உறுதி மற்றும் ஸ்டைல் உடன் அவர் நீதிக்காக மட்டுமின்றி, தொழிலாளர் வர்க்கத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கவும் கிளர்ந்தெழுகிறார். இதில் வின்டேஜ் ரஜினியின் ஸ்டைல் மற்றும் லோகேஷ் […]

ஜி.வி.பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கருக்கு தனுஷ் வாழ்த்து..

71-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘பார்க்கிங்’ படத்துக்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தேசிய விருது வென்றிருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘கிராண்ட் ஃபாதர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்கி, அதில் எம்.எஸ்.பாஸ்கருக்கு பேரனாகவும் நடித்து வருகிறார். இப்படத்தை குட்டி ஸ்டோரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் […]

ஹோட்டல் அறையில் பிரபல நடிகர் மரணம்..

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் (51). சின்னத்திரை, மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ள இவர் மிமிக்ரி கலைஞரும் கூட. இவர் ‘பிரகாம்பனம்’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக, கேரள மாநிலம் சோட்டானிக்கராவுக்கு வந்தார். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார். படப்பிடிப்பு முடிந்ததால் அறையை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். அவர் அறையின் கதவு நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது கலாபவன் நவாஸ் சுயநினைவின்றி இருந்தார். […]