வில்லிவாக்கம் பரப்புரை ரத்து: ஏமாற்றத்தில் தவெக பெண் தொண்டர்கள் – பனையூர் விரைந்தார் விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தனது தேர்தல் பரப்புரையின் முதல் நாளிலேயே வில்லிவாக்கம் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வை திடீரென ரத்து செய்தது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரப்புரைக்காகத் திரண்டிருந்த தவெக பெண் தொண்டர்கள், விஜய்யைக் காண நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு நேரடியாகப் பனையூர் இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். இதனால் உற்சாகத்துடன் வந்திருந்த பெண் தொண்டர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களா அல்லது தவிர்க்க […]