நடிகர் நாக சைதன்யாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறும் சூழலில், அவரைப் பிரிந்த சமந்தாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என நெட்டிசன்கள் கணித்து சொல்கின்றனர். இது குறித்த தகவல்கள் பார்ப்போம்..
நடிகை சமந்தா, புஷ்பா படத்தில் ஆடிய ஆட்டம் அவரை ரீ என்ரி கொடுக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து ராஜ்-டிகே இயக்கத்தில் ‘சிட்டாடல் ஹனி பன்னி’ வெப் தொடரில் நடித்த நடிப்பு, அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது. தொடரில், சமந்தாவுக்கு ஜோடியாக வருண் தவான் நடித்திருந்தார்.
இந்நிலையில், சமந்தா இதயத்தில் மீண்டும் ஒரு காதல் பூத்திருப்பதாக தெரிகிறது. அதாவது, தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவியின் மகனான நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருவதாக திரை வட்டாரம் குறிப்பிடுகிறது.
ஆம், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு கவிதையை பகிர்ந்திருந்தார். அந்த போஸ்ட்டின் கமெண்ட் செக்ஷனில் அர்ஜுன் கபூர், ‘இந்தக் கவிதையின் பிரிண்ட் எனது வீட்டு சுவரில் மாட்டப்பட்டிருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
அதற்கு, சமந்தா ஹார்ட்டின் பறக்கவிட்டார். இதனை கவனித்த நெட்டிசன்களில் ஒரு தரப்பினர், ‘அட அர்ஜுன் கபூருக்கும் சமந்தாவுக்கும் டேஸ்ட் ஒரே மாதிரி இருக்கிறதே. சமந்தாவும் ஹார்ட் விடுறாரே.
ஒருவேளை, இருவரும் காதலிக்கிறார்களோ, திருமணம் செய்து கொள்ளப்போகிறார்களோ, என பட்டி மன்றமே நிகழ்த்தினர்.
இது, சாதாரண நிகழ்வுதான், இதில் காதல் ஒன்றுமில்லை என்கின்றனர் ஒரு தரப்பினர்.
ஏனெனில், ‘இரண்டாவது திருமணத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை’ என சமந்தா கூறியிருந்ததை சுட்டிக்காட்டுகின்றனர் இன்னொரு தரப்பு ரசிகர்கள்.
இதற்கிடையே, அர்ஜுன் கபூர் சமீபத்தில்தான் நடிகை மலைக்கா அரோராவை பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை அடுத்த மாதம் திருமணம் செய்து. கொள்ளவிருக்கிறார்.
அவ்வகையில், சமந்தாவும் அர்ஜூன் கபூரும் திருமண வாழ்வில் இணைவர், இணைய வேண்டும் எனவும் சமந்தாவின் தீவிர ரசிகர்கள் விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.