Ammuchi Season 2 : OTT தளங்களின் வரவில் எண்ணற்ற தொலைத்தொடர்கள் வெளிவருகின்றன, ஆனால் அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்து தரப்பிலும் ரசிகர்களை கவர்கின்றன. அந்த வகையில் “அம்முச்சி” தொடர் முதல் சீசனில் பலரின் இதயங்களை வென்றது. நக்கலைட்ஸ் என்ற புகழ்பெற்ற YouTube சேனலால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றது. உண்மையில், ‘அம்முச்சி’ என்ற வார்த்தை நம்மிடையே ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பை உருவாக்கியுள்ளது, இப்போது இந்தகுழு அம்முச்சி சீசன் 2 உடன் மீண்டும் வந்துள்ளது. இந்த டிரமா காமெடி தொடரின் புதிய சீசன் 8 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக்கூடியது.

கிராமப்புற பின்னணியில் அமைக்கப்பட்ட கதை மாந்தர்கள், குடும்பங்கள், உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான மோதல்கள் ஆகிய கதைகருக்களின் வழியாக இந்தக்கதை பயணிக்கிறது.

கதை முதன்மையாக மூன்று முக்கிய காதாப்பாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கண்டிப்பான கிராமப்புற தந்தை மாகாளி, ஒரு ஆடம்பரமான கிராமப்புற வில்லன் மசநாய் மணி, படிப்பின் மீதான உண்மையான ஆர்வம் கொண்ட ஒரு கிராமப்புற பெண், தன்னைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கான போராடும் ஒரு நாயகன் உள்ளடக்கிய மூன்று கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் பின்னணியில் இந்தக்கதை செல்கிறது. இந்த திரைக்கதை கிராமப்புற வாழ்க்கை முறை மற்றும் கிராமத்து உணர்ச்சிக் கலவையை யதார்த்தமாக அணுகுவதோடு, ஒவ்வொரு எபிசோடிலும் எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டிருக்கும். அம்முச்சியைப் பார்ப்பது கிராமங்களில் கோயில் திருவிழாவிற்குச் செல்வது போன்ற ஒரு அனுபவமாக இருக்கும், இது மக்கள் ஒன்றாக கூடுவதையும் அவர்களுக்குள் பிணைப்பபு உருவாவதையும் காட்டும். ஒரு திருவிழா மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அவர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள், சிறிய கடைகள் மற்றும் அந்தக் கடை விற்பனையாளர்களைச் சுற்றியுள்ள குழந்தைகள் என கிராமப்புற வாழ்வை கண்முன் காட்டும்.

அம்முச்சி சீசன் 2 தொடரை இயக்குநர் ராஜேஷ் காளிசாமி இயக்கியுள்ளார். பிரசன்னா பாலச்சந்திரன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அம்முச்சி சீசன் 2 இன் நட்சத்திரக் குழுவில் அருண், சசி, மித்ரா ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் மற்றும் சின்னமணி டைட்டில் ரோலில் அம்முச்சியாகவும் நடிக்கின்றனர். மேலும் செல்லதுரை ஆகா மு. பிரசன்னா பாலச்சந்திரன், மாகாளியாக சந்திரகுமார், மசநாய் மணியாக ராஜேஷ் பாலச்சந்திரன், ஆகியோருடன் ஸ்ரீஜா, தனம், சாவித்திரி, முத்தமிழ், மனோஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். விவேக் சரோ இசையமைப்பாளராகவும், கண்ணன் பாலு படத்தொகுப்பாளராகவும், சந்தோஷ் குமார் ஒளிப்பதிவுவுன் செய்கிறார்கள்.

அம்முச்சி சீசன் 2 இல் டிரம் அடிக்கும் போட்டி, கிளாசிக் ரேக்ளா ரேஸ், சிலம்பம் போட்டி, பாரம்பரிய மல்யுத்தப் போட்டி மற்றும் கலாச்சாரத்தை உள்ளடக்கிய கூடுதல் சிறப்புக்கள் உள்ளது. இந்தத் தொடர் பார்வையாளர்களுக்கு ஒரு கிராமத்தின் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தின் அழகான மற்றும் யதார்த்தமான வாழ்வியலை வழங்கும். குறிப்பாக, கிராமங்களை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடியேறிய தமிழர்களை, தங்கள் சொந்த அனுபவத்தை உணர வைக்கும் நிகழ்ச்சியாக இது இருக்கும். எளிமையான சொற்களில் சொல்வதானால், இது அவர்களின் கடந்த கால நினைவுகளை மீளுருவாக்கம் செய்து பார்ப்பதாக இருக்கும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.