இளையராஜாவுடன் இன்று ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு; செல்லச்சண்டை..
‘இசைப் பிரம்மா’ இளையராஜாவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திடீரென சந்திக்க காரணம் என்ன? இது குறித்த தகவல்கள் பார்ப்போம், வாங்க..
மாஸ் டைரக்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகின்றார் ரஜினி. இந்த படத்திலும் தொடர்ந்து அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆதலால், 1000 கோடி ரூபாய் கலெக்ஷனாகும் முதல் தமிழ்ப் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது ரஜினிகாந்த் இசைஞானி இளையராஜாவை சந்தித்துள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், திடீரென ரஜினி இளையராஜாவை சந்திக்க காரணம் என்ன? என கேட்டு வருகின்றனர்.
இன்னும் சில தினங்களில், (அதாவது 12-ந்தேதி) ரஜினியின் பிறந்த நாள் வரவுள்ளது. ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடித்த ‘தளபதி’ திரைப்படம் (புதிய பொலிவுடன்) ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
ஒருவேளை, அது விஷயமாக ரஜினி- இளையராஜா சந்திப்பு நடந்ததா? என ரசிகர்கள் ஆராய்கின்றனர்.
மேலும், ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசரில் இளையராஜா முன்னதாக இசைத்த (ஆசை நூறு வகை…) பாடல் வந்தது. அதற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அந்த விஷயம் தொடர்பாக, இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை நடந்ததா? என தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்த சந்திப்பு பற்றி அமெரிக்க பாடகி, நடிகை மற்றும் தயாரிப்பாளரான சைந்தியா லோர்டே என்பவர், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
“அவர்களை சந்தித்தது பற்றியும், அவர்களுக்குள் நடந்த செல்லச்சண்டை பற்றியும், ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் மரியாதை பற்றியும் அந்த பாடகி சொல்லியிருக்கின்றார். அதன் விவரம்:
“இன்று ராஜா சாரின் அலுவலகத்தில், சூப்பர் ஸ்டாருடன் சந்திப்பு. இரு மேதைகளுடன் ஒரே படத்தில் நான். இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு.
ராஜா சார், “புகைப்படத்தில் ரஜினி சார் தான் நடுவில் நிற்க வேண்டும்” என சொல்கிறார். ஆனால், ரஜினி சாரோ, ராஜா சாருக்கும் மதிப்பளிக்கும் விதமாக, “பாடகியான என்னை நடுவில் நிற்க வேண்டும்” என சொல்ல, அவர்களது அழகிய செல்லச் சண்டையை ரசித்தேன்.
இப்படியாக, யார் எங்கு நிற்பது என்பதை முடிவு செய்ய சில நொடிகளானது. சூப்பர் ஸ்டாரின் ஆசிர்வாதத்தையும் பெற்றேன்’ என அமெரிக்கப் பாடகி நெகிழ்ந்திருக்கிறார்.
ஆம், ராஜா சார் எடுத்த முடிவின்படி எடுத்த புகைப்படம் தான், தற்போது வலைத்தளம் எங்கிலும் வைரலாகி தெறிக்கிறது.