Alya Manasa Daughter Cute Video

ராஜா ராணி ஆலியா மானசாவின் மகள் ஆய்லாவின் மழலைப் பேச்சுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

Alya Manasa Daughter Cute Video : விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ் ஆல்யா ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில் இருவரும் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஆய்லா என்ற குழந்தை உள்ளது. குழந்தையின் புகைப்படம் மழலை பேச்சு வீடியோக்களை இருவரும் தங்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்.

ராஜா ராணி தொடரை‌ தொடர்ந்து இருவரும் விஜய் டிவியில் உள்ள தொடரில் தனித்தனியாக நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இவர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற பதிவுகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

அதில் ஆய்லாவின் மழலை பேச்சு சுட்டி தனத்தினை அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.