வெறித்தனமாக டான்ஸ் பர்பாமன்ஸ் செய்து விஜய் டிவி நிகழ்ச்சிக்கு தயாராகும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆல்யா மானசா.

Alya Manasa Dance Practice Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆலியா மானசா.

இவர் இதே சீரியலில் நாயகனாக நடித்து வந்த சஞ்சீவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றிற்காக டான்ஸ் பிராக்டிஸ் செய்து வருவதாக வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பிக் பாஸ் 4 என்ட்ரிக்கு தயாராகுகிறீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆல்யா மானசாவிற்கு கைக்குழந்தை இருப்பதால் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வது சந்தேகம் தான் எனவும் கூறப்பட்டு வருகிறது.