Dhadha 87 sathya

DhaDha 87 Update : ஆளப்போறான் தமிழனை தொடர்ந்து ஆள வருகிறார் நமது சத்யா என தாதா 87 படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தாதா 87. மார்ச் 1 தேதி முதல் இப்படம் உலகம் முழுவதும் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை கலை சினிமாஸ் கலைச் செல்வன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

லேண்டர் லீ மார்ட்டி இந்த படத்திற்கு இசையமைக்க, ராஜ பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிரஞ்சன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இப்படக்குழுவினர் நாளுக்கு நாள் வித்தியாச வித்தியாசமான போஸ்டர்களை வெளியிட்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இன்று மெர்சல் படத்தில் மெகா ஹிட் பாடலான ஆளப்போறான் தமிழன் பாடல் வரியை கொண்டு ஆளப்போறான் நம்மவர் சத்யா என்ற பெயரில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

போஸ்டர் பார்ப்பதற்கே மிகவும் கலர் புல்லாக இருப்பதால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது. அதே சமயம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.

Sathya

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.