அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Web Ads

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார் என்பது ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..

‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ‘தல’ ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து அஜித் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அவ்வகையில், அஜித்தின் 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அல்லது கார்த்திக் சுப்பராஜ் ஆகிய இருவரில் ஒருவர் இயக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அஜித் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி அடுத்தடுத்த பரிசுகளை வாங்கி குவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

Web Ad 2

இந்நிலையில் அஜித்தின் 65-வது படத்தை ‘கேஜிஎஃப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இயக்குனர் அட்லீயும் அஜித்துக்கு கதை கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து ‘புஷ்பா’ பட இயக்குனர் சுகுமார் ஏகே 65-வது படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சூழலில் தனது 64 மற்றும் 65-வது படங்களின் இயக்குனர் யாரென்பது அவரது பிறந்த நாளான மே-ந்தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ak 65 movie director is pushpa director sukumar