Ajith and Siva Combo

Ajith And Siva Combo : அஜித், சிவா மீண்டும் இணைந்தால் அந்த படத்தை தயாரிக்க ரெடியாக இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சிவா. சிறுத்தை படத்தின் மூலம் பிரபலமாகி அஜித்தை வைத்து வீரம் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.

இந்த படத்தை தொடர்ந்து வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் படத்தையும் இயக்கியுள்ளார்.

தல ரசிகர்களோ விவேகம் படத்தின் எதிர்மறையான விமர்சனங்களால் சிவாவுடனான கூட்டணி போதும் என கூறி வருகின்றனர்.

அஜித்தும் தன்னுடைய அடுத்த படத்திற்காக எச். வினோத்துடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான தனச்செழியன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கமர்ஷியல் படம் தல-யின் ‘வீரம்’. சிவா இயக்கிய இந்த படத்தை பல முறை பார்த்து ரசித்தேன்.

அப்படி ஒரு காம்பினேஷன், அப்படி ஒரு சூப்பர் கதை கிடைச்சா, லட்டு மாதிரி ஒரு படம் கொடுத்து, ரசிகர்களை கொண்டாட வைக்கலாம். சாய் பாபா கருணை கிடைக்குமான்னு தெரியலை. பார்ப்போம் என பதிவிட்டுள்ளார்.

கிராமத்து கதையில் அஜித், சிவா கூட்டணி அமைக்க தயாராக இருந்தால் அந்த படத்தை தான் தயாரிக்க ரெடியாக இருப்பதாக தனச்செழியன் அவர்கள் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.