நடிகர் விஜய் சேதுபதி அஜித் பட இயக்குனரான வினோத் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கோலிவுட் திரை வட்டாரத்தில் பிரபல இயக்குனராக திகழ்பவர் தான் வினோத். இவர் நேர்கொண்ட பார்வை, வலிமை என தொடர்ந்து தல அஜித் படங்களை இயக்கி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். அதற்குப் பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக தல அஜித் குமாருடன் இணைந்து AK61 என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

அஜித் பட இயக்குனருடன் விஜய் சேதுபதி!!… உற்சாகத்தில் ரசிகர்கள்.

இதில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் விரைவில் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து பாங்காக்கில் ஒரு சில காட்சிகளை படம் பிடிக்க இயக்குனர் வினோத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் பட இயக்குனருடன் விஜய் சேதுபதி!!… உற்சாகத்தில் ரசிகர்கள்.

இந்நிலையில் இயக்குனர் வினோத் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த சூப்பரான தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.