கணவரின் இறப்புக்கு பிறகு அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார் அஜித்தின் தாயார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவருடைய தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலக் குறைபாடு காரணமாக உயிர் இழந்தார்.
கணவரின் இறப்புக்குப் பிறகு அஜித்தின் தாயார் வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை அஜித்தின் அண்ணன் அனில் குமார் வெளியிட்டுள்ளார்.
அவருடன் கடற்கரையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவில் முடி மொத்தமும் நரைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் அஜித்தின் அம்மா.
தற்போது அஜித்தின் அம்மாவுக்கு 75 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.