அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் கைவிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக போகும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கடந்த மே 1ஆம் தேதி போஸ்டருடன் அதிகாரிவபூர்வமாக அறிவித்திருந்தது.

அதன் பிறகு இப்படம் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராமல் இருந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், படத்தின் படப்பிடிப்பு துவங்க அஜித் தரப்பிலிருந்து மேலும் தாமதமாகும் என்று கூறியதால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் விடாமுயற்சி படத்தை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது.