துணிவு திரைப்படத்தின் பிரமோஷன் தகவல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். போனி கபூர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜிப்ரான் இசையில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையதளத்தில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ள லைக்கா நிறுவனம் ஸ்கை டைவிங் மூலம் துணிவு திரைப்படத்தின் பிரமோசனை வேற லெவலில் தொடங்கியது.

அதில் துணிவு திரைப்படத்தின் அப்டேட் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகும் என்றும் அன்று துணிவு நாள் என்றும் அறிவித்திருந்தது. இதனால் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகலாம் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் வெளிநாட்டு விநியோகஸ்தர் LYCA மூலம் இதுவரை கண்டிராத பிரமோஷனை இப்படத்திற்காக அந்நிறுவனம் செய்யும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் புர்ஜ் கலீஃபா, டைம்ஸ் ஸ்கொயர், அமெரிக்கா & பில்போர்டு ஆகிய இடங்களில் துணிவு படத்தின் பிரமோஷன் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அஜித் ரசிகர்கள் இந்த தகவலை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.