நடிகர் அஜித்குமார் விமான நிலையத்தில் ஒரு மூதாட்டி இடம் ஆசிர்வாதம் பெற்றிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரகனி மற்றும் பல திரை நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் அஜித் வயதானவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அதாவது சமீபகாலமாக ரசிகர்கள் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுப்பதை திரும்பாமல் இருந்த நடிகர் அஜித். தற்போது விமான நிலையத்தில் பயணத்தின் போது வயதானவர்களின் ஆசைக்கு இணங்க அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ஒரு மூதாட்டியோடு புகைப்படம் எடுக்கும் போது அவர் அஜித்தை ஆசீர்வாதம் செய்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.