ரீசண்டாக விமான நிலையத்திற்கு வந்த நடிகர் அஜித்குமாரின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. இதன் வரவேற்பை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அனிருத் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருப்பதாக சில தகவல்கள் கூறப்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது இணையதளங்களில் அஜித்தின் சுற்றுலா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில் தற்போது ரெட் கலர் டி-ஷர்டில் விமான நிலையத்திற்கு வருகை தந்திருக்கும் அஜித் குமாரின் ரீசன்ட் புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.