குழந்தைகளுடன் ஜாலியாக சைக்கிள் ரைட் செய்த அஜித்தின் வீடியோ ட்ரெண்டிங்காகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் தற்போது துணிவு திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து விடாமுயற்சி என்னும் தலைப்பு கொண்ட அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு உலக சுற்றுலா சென்றிருந்த நடிகர் அஜித்குமார் தற்போது சென்னை திரும்பியதால் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்திருக்கும் நிலையில் ஏராளமான குழந்தைகளுடன் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு நடிகர் அஜித்குமார் சைக்கிளில் ரைடு சென்று இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காகி வருகிறது.