சென்னை திரும்பிய நடிகர் அஜித்குமாரின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அவர் துணிவு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அனிருத் இசையமைப்பில் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது. அதன் பிறகு இப்படம் தொடர்பான எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்படத்திற்கான பணிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் வெகு நாட்களாக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நடிகர் அஜித் துபாயிலிருந்து மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். அவரை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருவதோடு விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.