விடாமுயற்சி படத்துக்காக 10 கிலோ எடையை குறைத்துள்ளார் நடிகர் அஜித்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான முதல் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்காக தனது உடல் எடையை கிட்டத்தட்ட 10 கிலோ குறைத்து ஸ்லிம்மாக மாறி உள்ளார். ரசிகருடன் அஜித் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.