பெங்களூரை சேர்ந்த தல ரசிகர்களின் வீடியோ வைரல்.

தல அஜித்தின் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் நாளை பொங்கல் பண்டிகை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையமைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் ரிலீஸ் இருக்காங்க பல இடங்களில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் பெங்களூரை சேர்ந்த தல ரசிகர்கள் துணிவு படத்தின் கட்டவுத்திற்காக பிரம்மாண்ட மாலையை தயார் செய்துள்ளனர். 7 லட்சம் மதிப்பிலான இந்த மாலையை அஜித்தின் கட்அவுட்டிற்கு அணிவிக்க இருப்பதாக அந்த ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வியந்து போன அனைத்து ரசிகர்களும் இந்த வீடியோவை ஆச்சரியத்துடன் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.