சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்காக மாறியுள்ளார் அஜித்.

Ajith Fans Banner for Valimai in Madurai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே 2 பாடல்கள், ஒரு கிளிம்ஸ் வீடியோ, மற்றுமொரு மேக்கிங் வீடியோ வெளியான நிலையில் மூன்றாவது சிங்கிள் ட்ராக் அல்லது டீசர் வெகு விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது.

நான் பேசுனாலே 1000 பிரச்சனை – Director Pa .Ranjith Bold Speech..! | Writer Movie Press Meet | HD

சிதம்பரம் நடராஜர் கோவில் : இன்று முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி விழா

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் அஜித்தை பகத் சிங் போல சித்தரித்து மிகப் பெரிய பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அச்சு அசலாக அஜித் குமார் அப்படியே பகத்சிங் போலவே இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

மேலும் அந்த பேனரில் வலிமையும் வரலாறும் என்றைக்குமே அழியாது என வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனை சமூக வலைதளங்களிலும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.