Ajith Condition on Valimai Movie Making

இதெல்லாம் படத்துல இருக்கவே கூடாது என வலிமை படத்துக்காக அஜித் இயக்குனர் வினோத்துக்கு கண்டிஷன்களை போட்டுள்ளார்.

Ajith Condition on Valimai Movie Making : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வலிமை திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது படக்குழு படம் திட்டமிட்டபடி வெளியாகும் என சொன்னாலும் கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாகவே சொல்லப்பட்டு வருகிறது.

அனைத்துப் பொதுக்கூட்டங்களும் ரத்து : காங்கிரஸ் அறிவிப்பு

இந்த நேரத்தில் வலிமை படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே இயக்குனர் வினோத்துக்கு அஜித் போட்ட கண்டிஷன் குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது போலீசை கொச்சைப்படுத்தும் வகையில் எந்தவித காட்சிகளும் படத்தில் அமையக்கூடாது என தெரிவித்துள்ளார்.

Kaathuvaakula Rendu Kaadhal – Naan Pizhai Lyric| VijaySethupathi, Nayanthara, Anirudh, VigneshShivan

அதுமட்டுமல்லாமல் படத்தில் தனி மனிதத் தாக்குதல் என்பது இருக்கக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். யாரையும் சீண்டுவது போன்ற காட்சிகள் இடம் பெறக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வினோத்தும் இந்த கண்டிஷன்களை மனதில் வைத்து தான் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.