பைக் டூரில் சாதனை படைத்திருக்கும் அஜித் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகைக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

பைக் டூரில் சாதனை படைத்த தல அஜித்… வெளியான வேற லெவல் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்.!!

பலத்தை எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக இருக்கும் இப்படத்திலிருந்து அண்மையில் ஜிப்ரான் இசையில் வெளியான சில்லாசில்லா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் பைக் ரைடில் படைத்த புதிய சாதனை குறித்த தகவலை அவரது மேலாளர் தெரிவித்திருக்கிறார்.

பைக் டூரில் சாதனை படைத்த தல அஜித்… வெளியான வேற லெவல் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்.!!

அதாவது தல அஜித் அவர்கள் உலக பைக் சுற்று பயணத்தில் முதல் கட்டமாக இந்தியாவில் முடித்து விட்டதாக மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் பைக் ரைடில் அஜித் சென்ற அனைத்து இடங்களிலும் ரசிகர்களின் அன்பு பிரதிபலித்தது என்றும் இது அனைத்து ரைடர்களுக்கும் பெருமையான தருணம். துணி இல்லாமல் வெற்றி இல்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இவர் பதிவிட்டுள்ள இந்த தகவல் தல ரசிகர்களின் வேற லெவலில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.