Valimai Ajith Character Name
வலிமையில் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பதும் தற்போது கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் வலிமை.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்திலும் அதன் பின்னர் சென்னை கோகுலம் ஸ்டுடியோஸிலும் நடைபெற்றது.

இதனையடுத்து சிறு இடைவெளிக்கு பிறகு தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன. வலிமையில் வில்லன் இல்லை வில்லி தான் அவர் ஹீமா குரோஷி தான் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது தல அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐ.பி.எஸ் என்ற பெயரில் நடிப்பதாக தகவல் ஒன்று கசிந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது, ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.