முற்றிலும் எதிர்பார்க்காத இயக்குனருடன் கூட்டணி போடுகிறார் தல அஜித்.

Ajith 62 Movie Director and Production Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் என தகவல்கள் கசிந்துள்ளன.

முற்றிலும் எதிர்பார்க்காத கூட்டணியில் இந்த திரைப்படம் உருவாகியிருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. மிக விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.