Aishwarya Rajesh

சிவகார்த்திகேயனை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

Aishwarya Rajesh in Pushpa Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பல படங்கள் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பின்னர் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தார்.

சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து முன்னணி நடிகருக்கு தங்கச்சியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் - யார் அந்த நடிகர் தெரியுமா?

நம்ப வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் இடையே அண்ணன் தங்கச்சி பாண்டிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு முன்னணி நடிகருக்கு தங்கையாக நடிக்க உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா என்ற திரைப் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இவருக்கு பல படங்களில் தங்கையாக நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வருவதாக கூறப்படுகிறது.