வலிமை படத்தை பார்க்கப் போகும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் பிரபல தமிழ் இயக்குனர்.

Adhik Ravichandran Warning to Ajith Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது. ஏற்கனவே படத்தின் டீசர், ட்ரைலர் படத்தைப் பார்த்தவர்களின் விமர்சனங்கள் உள்ளிட்டவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது.

இப்படியான நிலையில் தற்போது வலிமை படம் பற்றி AAA படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் வலிமை படத்தை பார்க்கப் போகிறீர்களா? அப்போ இந்த சீனில் உங்கள் காதை பொத்திக் கொள்ளுங்கள். அஜித் ஆக்சனில் தெறிக்க விடுவார் அவரது கண்களில் அனல் தெரியும் என கூறுகிறார். ஆனால் அது எந்த காட்சி என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

இதனால் படத்தின் மீது ஏற்கனவே எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருக்கும் ரசிகர்களுக்கு இவருடைய பதிவு இன்னும் அதை அதிகப்படுத்தியுள்ளது. படம் முழுவதும் நிறைய ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என ஏற்கனவே படக்குழுவினர் கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‌‌

https://twitter.com/Adhikravi/status/1492853778248130560?t=q5uOB0YmJ-BMSSeOU7Ffog&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.