
சீரியலில் நடிக்கும்போது இருந்ததை விட தற்போது வாணிபோஜன் ஆளே மாறிப் போய் உள்ளார்.
Actress Vani Bhojan Latest Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் வாணி போஜன்.
இந்த சீரியலை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். அதன் பின்னர் வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே என்ற படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்தார்.
நடிகர் வைபவ்க்கு ஜோடியாக லாக்கப் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

சீரியலில் நடிக்கும் போது இருந்ததை விட தற்போது மனிதன் தன்னுடைய எடையை மேலும் குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.
இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வாணி போஜன் அழகை ரசிகர்கள் பலர் செம க்யூட் என வர்ணித்து வந்தாலும் சிலர் சீரியலில் இருந்தபோது நல்லா இருந்தீங்க இப்போ ரொம்ப ஒல்லியாகிட்டீங்க எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.