ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: நடிகை ஷகிலா ரொமான்ஸ் பதில்..
கவர்ச்சியை கடந்து காமெடி, குணச்சித்திர நடிகையாகவும் உலா வரும் ஷகிலாவின் வாய்மொழி பார்ப்போம்..
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவர்ச்சி நடிகை ஷகீலா.
மலையாள திரையுலகில் இவர் நடித்த படங்களுக்கு செம மார்க்கெட். மம்முட்டி, மோகன்லால் படங்களை விட ஷகிலா படங்களுக்கு அதிகம் வசூல்.
கவர்ச்சியாக நடிப்பதை நிறுத்திய ஷகிலா, தற்போது சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவ்வகையில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷகிலா தான் ஒரு கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தை உடைத்தார்.
தொடர்ந்து அவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது யூ டியூப் சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தனது திருமணம் நிலைப்பாடு குறித்து கூறியதாவது: ‘திருமணம் செய்து கொண்டு ஒருத்தர் மூஞ்சியையே என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ‘தனது தங்கை தன்னை ஏமாற்றியதாகவும், தனது மொத்த பணத்தையுமே தங்கை ஏமாற்றி விட்டதாகவும், இதனால் ஜீரோவிலிருந்து மீண்டும் தனது வாழ்க்கையை தொடங்கியதாகவும் ஷகி தெரிவித்துள்ளார்.
