சமந்தா, கீர்த்தி சுரேஷ் இருவரும் மோதலா?
இரண்டு முன்னணி நடிகைகள் ஒற்றுமையாக இருக்க முடியாது என்பார்கள். ஆனால், அதை பொய்யாக்கி வருகிறார்கள் சமந்தாவும், கீர்த்தி சுரேஷும்.
மேலும், கீர்த்தி சுரேஷ் தன் சக நடிகைகளுடன் எல்லாம் நட்பாக பழகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் சமந்தா, கீர்த்தி சுரேஷ் சந்திப்பு நடந்திருக்கிறது. மதிய உணவு சாப்பிடும் நேரத்தில் சந்தித்து பேச ஆரம்பித்தவர்கள் மாலை வரை பேசியிருக்கிறார்கள். இதை தெரிவித்ததே சமந்தா தான்.
முன்னதாக ‘பேபி ஜான்’ பட வாய்ப்பு மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இதையடுத்து, மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அண்மையில், திரிஷாவை சந்தித்த நிலையில், தற்போது சமந்தாவை சந்தித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணமாகி விட்டால் சினிமா பணிகள் பாதிக்காது என நிரூபித்த நடிகைகள் பட்டியலில் சேர்ந்திருக்கிறார் கீர்த்தி. முன்பை விட படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். சமந்தாவோ ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் ரக்த் பிரம்மாண்ட் வெப்தொடரில் நடிக்க தயாராகி வருகிறார்.
முன்னதாக, புஷ்பா 2 படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடுவது தொடர்பாக சமந்தா, ஸ்ரீலீலா இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அதை இருவருமே கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், இருவரும் விருது விழாவில் சந்தித்துப் பேசி நீங்கள் நினைத்தது உண்மை இல்லை’ என சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்.
