நடிகை சதா தனது நாயுடன் இருக்கக் கூடிய புகைப்படத்தை வீடியோவாக எடிட் செய்து மனிதர்களை விட நாய் உயர்வானது என்று அதில் கூறி பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சதா. இவரது நடிப்பில் வெளியான ஜெயம், அன்னியன், உன்னாலே உன்னாலே போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரிட் ஆகும். இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

மனிதர்களை விட நாய் உயர்வானது - நடிகை சதாவின் வைரல் பதிவு.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை சதா டார்ச் லைட் என்ற படத்தில் தமிழில் நடித்திருந்தார். தற்போது 38 வயது நிரம்பிய நடிகை சதா இருப்பினும் தனது உடல் அழகை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். எப்போதும் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சதா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.

மனிதர்களை விட நாய் உயர்வானது - நடிகை சதாவின் வைரல் பதிவு.

தற்போது அவர் தனது செல்லப்பிராணியான நாயுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை வீடியோவாக எடிட் செய்து அதில் மனிதர்களை விட நாய் உயர்வானது என்று ஆங்கிலத்தில் கூறி பதிவிட்டிருக்கிறார்.