தனுஷ் மற்றும் ரகுவரன் உறவைப் பற்றி கூறிய நடிகை ரோகினி..!

Web Ads

தனுஷ் மற்றும் ரகுவரனின் உறவைப் பற்றி சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை ரோகிணி.

Actress Rohini spoke about Dhanush and Raghuvaran's relationship..
Actress Rohini spoke about Dhanush and Raghuvaran’s relationship..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தூள் கிளப்பி வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்து வரும் இவர் குறித்து நடிகை ரோகினி ரகசிய தகவல் சிலவற்றை பகிர்ந்துள்ளார்

தனுஷ் மற்றும் மூத்த நடிகரான ரகுவரன் ஆகியோருக்கு இடையே ஆன பிணைப்பை பற்றி சமீபத்தில் நடந்த நேர்காணலில் பேசியவர் காதல் கொண்டேன் படத்தின் போது ரகுவரன் என்னிடம் இந்த பையனிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று சொன்னார்.

தனுஷின் நடிப்பால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார் பல வருடங்களுக்குப் பிறகு யாரடி நீ மோகினி படத்தில் அவர்கள் மீண்டும் இணைந்து நடித்த போது அவர் என்னிடம் பலமுறை தனுஷ் என் பையன் மாதிரி என்று கூறியுள்ளார் அந்த நேரத்தில் நான் அவரை சந்தித்ததே இல்லை பிறகு தான் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நாங்கள் நிறைய பேசியிருக்கிறோம்.

தனுஷ் மற்றும் ரகுவரன் இடையே ஆன பிணைப்பு உண்மையிலேயே ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் போலவே இருந்தது என்று தெரிவித்து உள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress Rohini spoke about Dhanush and Raghuvaran's relationship..
Actress Rohini spoke about Dhanush and Raghuvaran’s relationship..