
நடிகை பார்வதி நாயருக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. குவியும் வாழ்த்து..!
நடிகை பார்வதி நாயருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில் படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமீர் போன்ற சில படங்களில் நடித்து பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தொழிலதிபரான ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
