விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். தமிழில் அசுரன் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அஜித்தின் துணிவு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

தற்போது ஏராளமான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் மஞ்சு வாரியர் தமிழில் அடுத்த படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருந்த விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதை தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாம் பாகம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் இருந்து முக்கிய தகவலாக வெளியாகி வைரலாகி வருகிறது.