சினிமாவை விட்டு விலக சிம்புவின் அந்த திரைப்படம் தான் காரணம் என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Actress Lekha About Simbu : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் பத்து தல என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்தாலும் சின்னத்திரையில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் சிம்புவுடன் கெட்டவன் படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமான லேக்கா வாஷிங்டன் சினிமாவை விட்டு விலக கெட்டவன் திரைப்படம் கைவிடப்பட்டது தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது மும்பையில் சிற்பக்கலை கலைஞர் ஆக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.