நடிகை கியாரா அத்வானி பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழும் இவர் 2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் இளம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவிலும் அறிமுகமாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அழகிய ஆடையில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.