Web Ad 2

ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகாவுக்கு தான் நஷ்டம்.. நடிகை கஸ்தூரி பேச்சு.!!

ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு தான் நஷ்டம் என நடிகை கஸ்தூரி பேசியுள்ளார்.

actress kasthuri talk about jananayagan movie
actress kasthuri talk about jananayagan movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.

ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது இதனால் படக்குழு படத்தின் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அவர்களது கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரி ஜனநாயகம் படம் வெளியிடாதது பாஜகவுக்கு நஷ்டம் திமுகவுக்கு தான் லாபம் என கூறியுள்ளார். எந்த விஷயத்திலும் நேரடியா திமுக சம்பந்தப்பட்ட இருக்குதுன்னு உங்களால சொல்லவே முடியாது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே ஜனநாயகன் ரிலீஸ் தள்ளி போனது குறித்து அவரவர் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரியும் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress kasthuri talk about jananayagan movie
actress kasthuri talk about jananayagan movie