பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும்:’டாக்ஸிக்’ படம் பற்றி ஹூமா குரேஷி நம்பிக்கை..

Web Ads

கீது மோகன்​தாஸ் இயக்​கத்​தில் யாஷ் கதா​நாயக​னாக நடித்துள்ள ‘த டாக்​ஸிக்’ படத்தில் கியாரா அத்​வானி, நயன்​தா​ரா, ஹூமா குரேஷி உள்பட பலர் பலர் நடித்துள்ளனர்.

கன்​னடம், ஆங்​கில மொழிகளில் உருவாகும் இப்படம் இந்​தி, தெலுங்​கு, தமிழ், மலை​யாளம் உள்​ளிட்ட மொழிகளில் மொழி மாற்​றம் செய்​யப்​பட்டு வெளி​யாகவுள்ளது. ஆக்‌ஷனுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து, இந்தப் படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நடிகை ஹுமா குரேஷி தெரிவிக்கையில்,

‘டாக்ஸிக் படம் பற்றி இப்​போது என்​னால் பேச முடி​யாது. அது பெரிய திரைப்​படம். அது பற்றி இப்​போது பேசுவது நியாயமற்​றது. அந்​தப் படத்​துக்​குச் சிறப்​பான அறி​முகம் தேவை என நினைக்​கிறேன்.

தயாரிப்​பாளர்​கள் திட்​ட​மிட்​டுள்ள நேரத்​தில் அதுபற்றி பேசுவேன். என்​றாலும் இந்​தி​யா​வின் மிகப்​பெரிய படமாக ‘த டாக்​ஸிக்’ இருக்​கப் போகிறது. அது பார்​வை​யாளர்​களை நிச்​சய​மாக வியப்​பில் ஆழ்த்​தும். இதை ஒரு ரசிகை​யாகச் சொல்​கிறேன்’ என தெரி​வித்​துள்​ளார்.

actress huma qureshi about the toxic film
actress huma qureshi about the toxic film