திரைப்படங்களில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒருவர்தான் நட்சத்திர நடிகர் ஆனால் நான்.? விஷ்ணு விஷால் ஓபன் டாக்.!!

விஷ்ணு விஷால் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால்.அதனைத் தொடர்ந்து ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், முண்டாசுப்பட்டி ,கட்டா குஸ்தி, லால் சலாம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் பேசிய விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது விஷ்ணு விஷால் திரைப்படங்களில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒருவர் தான் நட்சத்திர நடிகர் என்றும் என்னுடைய திரைப்படங்களுக்காக எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் கூட எனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார் மேலும் என்னை ஒரு நட்சத்திரம் ஆகவே கருதவில்லை ஒரு நாள் நான் அந்த இடத்திற்கு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
